முதன்மைச்செய்தி
January 13th, 2010
"எல்லாம் இழந்தவனின் கைகளிலிருந்து இனி எடுப்பதற்கு எதுவுமில்லை. ஆனாலும், அவன் கைகளையும் அறுத்துப் போடும் வேதனையாகக் காலம் நடத்தும் சோகங்களை எங்கே போய்ச் சொல்வது? சுதந்திரம் கேட்ட ஒரே பாவத்துக்காக மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு… கண்ணீரில் தத்தளித்துக் கிடக்கிறது ஈழ தேசம். அதன் ரணத்தைக் குத்திப் பார்க்கும் கொடூரமாக ஈழத்திலிருந்து வந்த செய்தி, மொத்தத் தமிழர்களையும் மறுபடி உயிர்வதையில் ஆழ்த்தி விட்டது!" என்று நீண்ட பெருமூச்சோடு சென்னை விமான நிலையத்தில் நம்மை எதிர்கொண்டார் திருமாவளவன். விரிவு… »
பிரதான செய்திகள்
ஏனைய செய்திகள்
1990ஆம் ஆண்டுமுதல் மக்கள் பாவனைக்குத் தடுக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த யாழ்ப்பாணம் வலி . வடக்குப் பகுதியில் கணிசமான பிரதேசத்தில் நேற்றுமுதல் மீளக்குடியமர்வுக்குப் பூர்வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தெல்லிப்பளையில் இருந்து மாவிட்டபுரம் வரை கே.கே.எஸ். வீதியின் மேற்குப்புறமாகவுள்ள இடங்களில் மீள்குடியமர்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
சிறிலங்காவில் நிராயுதபாணிகளான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்பிப்பதாகக் கருதப்படும் "சனல் 4″ ஒளிநாடா உண்மையானது என வெளியான அறிக்கையிலிருந்து தன்னைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன், அறிக்கையை வெளியிட்ட பிலிப் அல்ஸ்ரொன் சுதந்திரமாகச் செயற்படுகின்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களிற்கிடையே பொலனறுவைப் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது.ஐக்கியதேசியக்கட்சியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து பேரணி ஒன்று நடந்துகொண்டிருக்கையில் அந்த பேரணியை ஊடறுத்து ஆளும் கட்சியின் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சென்ற வேளை இந்த சம்பவம் நடந்துள்ளது.
விசாரணை மேற்கொள்ளும் நடைமுறைகளில் அரசுக்கு உள்ள குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களை நீதி, நியாயமின்றி நீண்ட காலம் வெறுமனே தடுத்து வைத்து இழுத்தடிக்க முடியுமா? என்று அரசுத் தரப்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடம் நேற்று உயர்நீதிமன்றத்தில் காட்டமாகக் கேள்வி எழுப்பினார் பிரதம நீதியரசர் அசோகா என். சில்வா.



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக