ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்தாலும் அந்தத் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டமை விசித்திரமான உண்மை. எக்காலத்திலும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் கரிசினை காட்டியமை, இலங்கைத் திருநாட்டில் அமைதி நிலவுவதற்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குமான வாய்ப்பு கடினமானது என்பதையே சுட்டிநிற்கின்றது.
சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து விட்டது. தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை புறந்தள்ளி அதனை ஒர் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்ததன் விளைவாக தமிழர் மீது பாரிய இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. எம் போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட பின்னர் தமிழரது விருப்பம் என்ன என்பதனை சனநாயக வழிமுறையில் உலகிற்கு எடுத்தியம்புவது தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கிய அரசியல் அபிலாசை என்ன என்பதனை நாடு நாடாக எடுத்தியம்பி வருகின்றனர்.
மேலதிக செய்திகள்
- அரச அதிபர் தேர்தல் முடிவில் தமிழ்கூட்டமைப்பின் அறிக்கை
- மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்யும் நாடுகளில் சிறிலங்காவும் அடக்கம் – ஐநா
- விடுதலைப்புலிகளின் மீதான தடையே அமைதிப்பேச்சு முறிவடைய காரணம் – பால் நியூமேன்
- அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் ஏதிலிகள் உண்ணாநிலைப் போராட்டம்
- கிளிநொச்சி வர்த்தகர் சடலமாக மீட்பு
- பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களிற்கு வாழ்த்து செய்தி – தமிழீழ மக்கள் பேரவை
- தமிழீழம் தனிநாடு என்பது தேர்தல் மூலம் தெளிவடைகிறது – கஜேந்திரன்
- தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் குறித்து மாறுபட்ட தகவல்
- ஈகி முத்துக்குமரன் முதலாமாண்டு வீரவணக்க நாள்
- புலம்பெயர்ந்த மக்களின் சிந்தனை வீச்சு
- "புதிய பாடம் படிக்க வேண்டும்!…, பழைய பாடம் தேவையில்லை!"…
- உயிரைப் பாதுகாக்க இந்தியாவிடம் உதவி கோரும் பொன்சேகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக