ஞாயிறு, 3 ஜனவரி, 2010

சிறிலங்காவின் இராணுவ இரகசியங்கள் விடுதலைப்புலிகளின் வலையமைப்புக்கு கிடைத்தமை தொடர்பாக விசாரணை- திவயின

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மானிப்பாய் வீதியில் தனது தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்தார்.
3 January 2010
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களது வீட்டுக் கதவுகள், ஜன்னல்கள் என்பன தற்போது காணாமல் போகத் தொடங்கியிருப்பதாகவும், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறும் வரையில் அவர்களது வீட்டு உடைமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
3 January 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான மேலும் சில கப்பல்கள் மற்றும் விமானங்கள் இன்னும் சில தினங்களில் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
3 January 2010
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச அதிபர் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான வகையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
3 January 2010
சிறிலங்கா இராணுவ இரகசியங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றதென்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3 January 2010
இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதியைஉரிமையைபெற்றுக் கொடுக்கும் விடயத்தில் தேர்தல் செயலக அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்குக் குறித்துத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஏமாற்றமும் பெருவிசன மும் வெளியிட்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது.
3 January 2010
சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
3 January 2010
எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக 14 இராசதந்திரிகள் கொழும்பின் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 January 2010
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொல்லுமாறு அரசாங்கம் உத்தரவிட்டதா இல்லையா என்பது தொடர்பில் பெரும்பாலான மக்கள் அக்கறை செலுத்தவில்லை என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
3 January 2010
சிறுவயதில் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் காரணமாக சிறிலங்காவில் தற்போது பாரிய சமூகப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக நன்நடத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது.
3 January 2010
யாழ். குடா நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பிரச்சார நடவடிக்கையில் இவர் ஈடுபட்டிருந்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
3 January 2010
சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இடைக்கால அதிகாரபரவலாக்கல் முறை ஒன்றை ஏற்படுத்தப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதார்.
2 January 2010
அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கியதாக முழுக் கிழக்கு மாகாணத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைப்பாரென ஜெனரல் சரத் பொன்சேகா இரகசிய தேர்தல் ஒப்பந்தமொன்றை செய்திருக்கிறார். இது ஒட்டு மொத்த தமிழனத்தையும், தமிழினத்தின் இருப்பையும் கேள்விக்குறியாக்குகின்ற சதிவேலைக்கு ஒப்பானதாகும்.
2 January 2010
கடந்தகால யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் முழுமையாக இன்னும் மீள்குடியமர்த்தப்படவும் இல்லை. மீள்குடி யமர்த்தப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.
2 January 2010
காணாமற் போனேரின் உறவினர்களை சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இன்று சந்தித்துக் கலந்துரையாடவிருக்கிறார். யாழ்ப்பாணம் வரும் அவர் குடாநாட்டில் காணாமற்போனோரின் உறவினர்களை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வீர சிங்கம் மண்டபத்தில் சந்தித்துக் கலந் துரையாடுவார்.
2 January 2010
வங்க கடலின் நடுவே – தமிழீழ
வரலாற்றை எழுதிச் சென்ற சரித்திர நாயகனே!,
தலைவரின் சுமைகளைச் சுமந்து – தமிழீழ
தலைவரால் தம்பியாக தளபதியாக நேசிக்கப்பட்டவரே!
எங்கள் தமிழீழ கனவு வளர்த்த – கனவு உலகமே
எங்கள் கிட்டு மாமா….
2 January 2010
சிறிலங்காவில் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதற்காக ஆங்கில மொழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரமே இனிமேல் ஏற்றுக்கொள்வதறகு சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
2 January 2010
நடைபெறப்போகும் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்காக வேட்பாளர்களினால் அமைக்கப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படங்கள் போன்றவை இன்னும் அகற்றப்படவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குறறஞ்சாட்டியுள்ளன.
2 January 2010
குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள். அவருடைய நாளாந்த செலவு பத்து இலட்சம் இலங்கை ரூபாய்கள்.
2 January 2010
சிறீலங்கா அரசின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
2 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக