ஞாயிறு, 3 ஜனவரி, 2010

மலேசியாவில் 31 தமிழ்ப் பள்ளிகளுக்கு வெ.7 இலட்சம்

மலேசியா சிலாங்கூரில் 31 தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை மேம்பாட்டுப் பணிக்கு சுமார் 7 லட்சம் வெள்ளியை மாநில அரசு வழங்கும்.
3 January 2010
வவுனியாவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுனர் நிதியில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
3 January 2010
அரச அதிபர் தோ்தலில் வெற்றி பெற்றால் பலாலியில் உள்ள விமானப் படைத்தளத்தை சர்வதேச விமானநிலையமாக தரமுயர்த்தவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் அரச அதிபர் வேட்பாளர் சரத் பொன்சேகா விரைவில் அறிவிப்பார் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
3 January 2010
சிறிலங்காவில் அப்பாவிகளாகிய நாம் எந்தவொரு குற்றங்களையும் செய்யாமல் சந்தேகத்தின் பெயரில் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டோம். பல விபரிக்கமுடியாத கொடுமைகளை சிறிலங்கா அரசு எம்மீது திணித்து துன்புறுத்தியது.
3 January 2010
புதிய நம்பிக்கைகளுடன் புதுவருடம் பிறந் துள்ளது, தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்று சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்ற ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைகளுடன் இந்த வருடத்தை நாம் வரவேற்கத் தயாராகின் றோம்.
3 January 2010
புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. கடந்த ஆண்டு, யுத்தம் ஏற்படுத்திய தீராத ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. சிதறுண்டு போன குடும்பங்கள், அங்கங்களை இழந்த மனிதர்கள், மகனைத் தேடியலையும் தாய் தந்தையர், பேரினவாதச் சிறைக் கூடங்களில் முகவரி இழந்து தவிக்கும் இளைஞர்கள் என்று தமிழினம் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளது.
3 January 2010
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மானிப்பாய் வீதியில் தனது தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்தார்.
3 January 2010
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களது வீட்டுக் கதவுகள், ஜன்னல்கள் என்பன தற்போது காணாமல் போகத் தொடங்கியிருப்பதாகவும், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறும் வரையில் அவர்களது வீட்டு உடைமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
3 January 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான மேலும் சில கப்பல்கள் மற்றும் விமானங்கள் இன்னும் சில தினங்களில் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
3 January 2010
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச அதிபர் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான வகையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
3 January 2010
சிறிலங்கா இராணுவ இரகசியங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றதென்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3 January 2010
இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான வசதியைஉரிமையைபெற்றுக் கொடுக்கும் விடயத்தில் தேர்தல் செயலக அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்குக் குறித்துத் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் ஏமாற்றமும் பெருவிசன மும் வெளியிட்டிருக்கின்றமை கவனிக்கத்தக்கது.
3 January 2010
சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான செய்மதி படங்களுடனான சான்றுகள் அமெரிக்காவை தளமாகக்கொண்ட குழுவினால் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
3 January 2010
எதிர்வரும் அரச அதிபர் தேர்தலில் மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக 14 இராசதந்திரிகள் கொழும்பின் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 January 2010
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொல்லுமாறு அரசாங்கம் உத்தரவிட்டதா இல்லையா என்பது தொடர்பில் பெரும்பாலான மக்கள் அக்கறை செலுத்தவில்லை என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
3 January 2010
சிறுவயதில் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் காரணமாக சிறிலங்காவில் தற்போது பாரிய சமூகப்பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக நன்நடத்தைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது.
3 January 2010
யாழ். குடா நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பிரச்சார நடவடிக்கையில் இவர் ஈடுபட்டிருந்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
3 January 2010
சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இடைக்கால அதிகாரபரவலாக்கல் முறை ஒன்றை ஏற்படுத்தப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதார்.
2 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக