
சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியாவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து விட்டது. தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை புறந்தள்ளி அதனை ஒர் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்ததன் விளைவாக தமிழர் மீது பாரிய இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. எம் போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிதைக்கப்பட்ட பின்னர் தமிழரது விருப்பம் என்ன என்பதனை சனநாயக வழிமுறையில் உலகிற்கு எடுத்தியம்புவது தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். புலத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கிய அரசியல் அபிலாசை என்ன என்பதனை நாடு நாடாக எடுத்தியம்பி வருகின்றனர்.