இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்பட்டமைக்குச் சொந்தக்காரன் யார் என்பதற்கு இப்போது விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இது தற்போது தேவையற்ற விடயமாகும். அதனை விடுத்து, சகோதரக் கம்பனி இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கு முயற்சிக்கின்றமையானது, கவலைக்குரியதாகும். 15 வருடங்கள் நாட்டிலிருந்து விலகியிருந்த ஒருவர் இதற்குத் தகுதியற்றவராவார்.
தற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் உள்ளடக்கம் என்ன? தமிழ் பேசும் மக்களை தோற்கடித்துவிட்டதான இனவாதத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டமாய் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இதுவே இதனது உள்ளடக்கமும், சாரம்சமுமாகும். சிந்திய அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தை செங்கம்பளம் ஆக்கி, அவர்களது மண்டை ஓடுகளை மேடையாக்கி, அவற்றின் மீது முடிசூட்டு விழா நடாத்துவதே இதன் சாரம்சமாகும்.
மேலதிக செய்திகள்
- கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போன கதை‐ இலங்கைக்கு குழு அனுப்ப இதுவல்ல நேரம் ‐ எஸ்.எம் கிருஷ்ணா
- போர்க்குற்றம் புரிந்த சிறீலங்காவுக்கு எதிராக டென்மார்க்கில் வழக்கு பதிவு
- தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. -வெளிநாட்டு ஆய்வு நிறுவனம்
- பிரித்தானியா தூதுவர், நோர்வே தூதுவர் ஆகியோர் யாழ் குடநாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.
- ஒபாமாவின் வருகையை முன்னிட்டு ஈழத்தமிழர் அவையினால், கவனயீர்ப்பு போராட்டம்
- சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்: மற்றுமொரு நபர் சடலமாக மீட்பு
- பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்!
- அரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனரென தெரிவிப்பது அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம்: ஐ.தே.க. குற்றச்சாட்டு
- மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: பாலஸ்தீனம்
- அவசரகாலச் சட்ட நீடிப்புக்காக மட்டும் இன்று பாராளுமன்றம் கூடுகின்றது
- கிளிநொச்சிக்கு மக்களை இப்போது குடியமர்த்த முடியாதுள்ளது – சந்திரசிறி
- சிறிலங்கா அரசத்தலைவர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புக்கு வலைவீசும் மகிந்த பொன்சேகா தரப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக