சிறிலங்காவில் போர் முடிவடைந்து விட்டது என்று அரசு அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அங்கு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிப்பதற்கான சூழல் தோன்றி உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. விரிவு… »
பிரதான செய்திகள்
[படங்கள்] மட்டக்களப்பு கல்குடா கடற்கரையிலிருந்து சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற நபரொருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாளான நேற்றிரவு சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். (more…)
பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும், இலங்கையின் கிழக்கில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது. (more…)
ஏனைய செய்திகள்
தற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் உள்ளடக்கம் என்ன? தமிழ் பேசும் மக்களை தோற்கடித்துவிட்டதான இனவாதத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டமாய் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இதுவே இதனது உள்ளடக்கமும், சாரம்சமுமாகும். சிந்திய அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தை செங்கம்பளம் ஆக்கி, அவர்களது மண்டை ஓடுகளை மேடையாக்கி, அவற்றின் மீது முடிசூட்டு விழா நடாத்துவதே இதன் சாரம்சமாகும். (more…)
இலங்கை இழைத்த போர்க்குற்றம் குறித்து சூடு பறக்கப் பேசி வந்த அமெரிக்கா தற்போது தனது நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கை நமக்கு தேவை என்ற புதிய மந்திரத்தை வெளியுறவுக்கான செனட் கமிட்டியின் அறிக்கை உச்சரிப்பதால், இலங்கை குறித்த தனது நிலையை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து விட்டது அமெரிக்கா. (more…)
முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த மாதம் ஈரோட்டில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை அகற்றும் போராட்டம் நடத்தினார். (more…)
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 40 தமிழ் அரசியல் கைதிகள், இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தம்மை விடுதலை செய்யவேண்டும் அல்லது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், எனக் கோரியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
நேற்று பாராளுமன்றக் கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையையும் தமிழக மீனவர்கள் பிரச்சனையையும் கேள்விகளாக எழுப்பிய தமிழக உறுப்பினர்களுக்கு பதிலளித்த எஸ்.எம் கிருஷ்ணா.கச்சத்தீவு மீதான உரிமை பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்ட ஒன்று. அதை மறுபடியும் மறு ஆய்வு செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதுகுறித்து இலங்கையுடன் பேச்சு நடத்தும் திட்டமும் அரசிடம் இல்லை. (more…)
விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு மேற்கொண்ட போரின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் டென்மார்க்கில் செயல்படும் தமிழ் அமைப்புகளினால் சேகரிக்கப்பட்டு, இலங்கை அரசை நீதிக்கு முன்நிறுத்த டென்மார்க் அரச சட்டதரணி ஒருவர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. (more…)
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. (more…)
இலங்கைக்கான பிரித்தானியா தூதுவர் பீட்ர் ஹெய்ஸ் மற்றும் நோர்வே தூதுவர் டோ ஹெற்றம் ஆகியோர் யாழ் குடநாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். (more…)
அமெரிக்க அரச தலைவரின் வருகையை முன்னிட்டு ஈழத்தமிழர் அவையினால், எதிர்வரும் 10ஆம் நாள் வியாழன் அன்று மாலை 5.30 மணி முதல்; 7மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்படுகின்றது. (more…)
முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்சினையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது. 1979ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டு காலமாக பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம் தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது. (more…)
நேற்று முன்நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் அரச ஊடக வியலாளர்கள் தாக்கப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பழிபோடுவதற்காக அரசால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் என்று ஐ.தே. கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்றுத் தெரிவித்தார். (more…)
அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடைபெறுவதற்காக மட்டும்இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ள பாராளுமன்றத்தை, பின்னர் ஜனவரி இரண்டாம் வாரம் வரை சபையின் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் நேற்று திங்கட்கிழமை யாழ். செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய சந்திரசிறி வன்னி பூநகரி, துணுக்காய் மற்றும் மல்லாவி பகுதிகளில் இதுவரை 28, 500 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். (more…)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி இரு பிரதான வேட்பாளர்களின் தரப்புகளில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகின்றது. (more…)
நாளை மறுதினம் வியாழக்கிழமை சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இதையொட்டி மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் மக்கள் பேரணி, தீபமேற்றல் ஆகிய நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன. வீரசிங்கம் மண்டபத்தில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறும். அதைத் தொடர்ந்து முத்தமிழ் சங்கமத்துடன் மக்கள் பேரணி இடம்பெற்று மாலை 6.30 மணிக்கு தீபமேற்றும் நிகழ்வு நடைபெறும். (more…)
மக்கள் பலமாக இருந்தால்தான் போராட்டம். மக்களை பலவீனமாக வைத்துக்கொண்டு எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது. எனவே மக்கள் போராட்டத்திற்கு வழங்கிய சொத்துக்களை பதுக்குவது திருட்டை விட மோசமானது என "ஈழம் இ நியூஸ்" (http://www.eelamenews.com/) இற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர். (more…)
சிறிலங்க அரசு தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறை, அதற்கு எதிரான ஒருதலைப்பட்சமானதாக இராமல், அமெரிக்காவின் இராணுவ நலனையும் உட்படுத்தியதாக இருக்க வேண்டும் என்று கோரும் ஒரு அறிக்கை தயாராகி வருகிறது. (more…)
தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இன அழிப்பு படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சட்ட வல்லுனரும் பேராசிரியருமான பிரான்சிஸ் ஏ. போய்ல் (Francis A. Boyle) எழுதிய நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. (more…)
ஐக்கிய நாடுகளின் வன்முறை மற்றும் சிறுவர் போராளிகள் தொடர்பான விசேட பிரதிநிதி அவர்கள் தடுப்பு முகாம்களில் உள்ள இளம் போராளிகளை சந்தித்துள்ளார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் விசேட பிரதி நிதியாகிய மெஜர் ஜெனெரல் பற்றிக் கமென்ற் அவர்களும் அரசாங்கம் சார்பில் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனெரல் தக நாயக்காவும் இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். (more…)
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பற்றிய உத்தி யோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்ட கையோடு, ஒவ்வொரு கட்சியும் தமது ஆதரவுகள் யார் யாருக்கு என்பதை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தங்களுடைய ஆதரவைத் தெரிவிப்பதில் ரொம்பவே அவசரம் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. (more…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக