வன்னியிப்பகுதியில் றோ முகவர்களாக இருந்த இலங்கைத்தமிழர்கள் ஐம்பது பேரை போர்முடிவடைந்த கையோடு றோ அமைப்பு இந்தியாவுக்குள் எடுத்துவிட்டது. வன்னியில் றோ முகவர்களாக செயற்பட்ட இந்த ஐம்பது பேரும் இலங்கைத்தமிழர்கள் என்றும் இவர்களை சிறிலங்கா அரசுடன் பேசி இரகசியமாக றோ இந்தியாவுக்குள் எடுத்துக்கொண்டது என்று சிறிலங்காவின் உயர் அரச மட்டங்களிலிருந்து கசிந்திருக்கிறது.
ஜனவரியில் நடக்கவுள்ள சிறீலங்கா குடியரசுத்தலைவர் தேர்தலில் இறங்கியுள்ள அரசாங்கமும், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் முதலில் ஊடக சுதந்திரத்துக்கும்ம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லை எனில் அது ஜனநாயகரீதியான தேர்தலாக அது இருக்காது எனவும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
யாழ் வலி-வடக்கிலும், திருகோணமலை சம்பூரிலும் அமைந்துள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை உடனடியாக அகற்றுங்கள். யாழ்ப்பாணம், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி சிறைச்சாலைகளிலே உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். இவை இரண்டு விடயங்களையும் உடனடியாக சிறீலங்கா அரசாங்கம் செய்தாகவேண்டும் என மனோ கணேசன் பா.உ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலதிக செய்திகள்
- அவசரகாலச்சட்ட நீடிப்பு 74 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
- அமெரிக்க கொள்கை – தமிழர்களின் புதிய அரசியல் – எம்மை ஒடுக்கும் சிங்களவனுக்கு நாமே தண்டனை கொடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்
- சகோதர கம்பனிகளால் நாடு சீரளிகின்றது அதனை காப்பாற்ற போகின்றேன் – சரத்பொன்சேகா
- முட்கம்பி வேலிக்குள்….பிரின்ஸ்டனின் இசையில் பதிய பாடல்..
- ஈழம் வெல்லும்வரை ஓயாதடி!! – வித்யாசாகர்
- அன்பான மீனகம் வாசகர்களுக்கு, அன்பு வணக்கங்கள்.
- ஒரு பொது வேட்பாளரை இனவாதக் கொண்டாடத் தேர்தலுக்கு எதிராக நிறுத்த முடியாத அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் கையாலாகதவர்களாய் உள்ளோமா?
- பிரபாகரன் படத்தை அகற்றிய EVKS இளங்கோவனுக்கு எதிராக துண்டு பிரசுரம்
- வவுனியாவில் அரசியல் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டம்
- கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போன கதை‐ இலங்கைக்கு குழு அனுப்ப இதுவல்ல நேரம் ‐ எஸ்.எம் கிருஷ்ணா
- போர்க்குற்றம் புரிந்த சிறீலங்காவுக்கு எதிராக டென்மார்க்கில் வழக்கு பதிவு
- தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. -வெளிநாட்டு ஆய்வு நிறுவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக