புதன், 4 நவம்பர், 2009

பேராசிரியர் சிவத்தம்பி எடுக்க வேண்டிய முடிவு – உதயன் தலையங்கம்

vikatan081109001சிறீலங்காவில் தற்பொழுது நடைபெற்றுவரும் கூட்டணி மோதல்களைப்பற்றி தமிழ்நாட்டு சஞ்சிகை விகடனில் வந்த கட்டுரை.

4 November 2009

sivathamby_01இலங்கையின் தமிழ் நாளிதழ்களிலும் இலங்கைத் தமிழர் சார்பான இணையத்தளங்களிலும், தமிழக நாளிதழ்கள் மற் றும் சஞ்சிகைகளிலும் பரபரப்பாக அண்மைக்காலத்தில் பேசப் பட்டார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. தமிழகத்தில் அடுத்த வருடத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நடத்த உத் தேசித்திருக்கும் உலக செம்மொழி மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா, கலந்துகொள்ள மாட்டாரா என்ற விடயத்தை ஒட்டி எதிரும், புதிருமான பல கருத்துகளும், விமர்சனங்க ளும், விளக்கங்களும், வியாக்கியானங்களும் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

4 November 2009

mp_sivaji_adaikalanaathanகடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளி நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

4 November 2009

thiruma_questionதமிழ்நாடு, புதுக்கோட்டையிலிருந்து நேற்று முன்தினம் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை சிறீலங்கா கடற்படையினர், பிடித்துச் சென்றுள்ளனர். இவ் அடாவடித்தனத்தைக் கண்டித்து  நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சிறீலங்கா சென்று மகிந்தவுடன் கைகுலுக்கிவிட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

4 November 2009

arrest2009சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் இணை நிறுவனரான ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுத  விநியோகம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4 November 2009

thadiyadiகொழும்பில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, கொழும்பு  லோட்டஸ் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் மீது சிறீலங்கா காவற்துறையினர் இன்று பிற்பகல், தடியடி பிரயோகம், கண்ணீர் புகைப்பிரயோகம்   மேற்கொண்டனர்.

4 November 2009

flag_ukபிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

4 November 2009

interpol_logoஅவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் நோக்கில் பயணித்த இலங்கைப் படகொன்று விபத்துக்குள்ளானதில் சிலர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளனர்.

4 November 2009

sarath-ponseke_sசிறீலங்கா மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள சிறீலங்கா இராணுவ உயர் தளபதி சரத் பொன்சேகாவை  விசாரணை செய்ய திட்டமிடுகிறது என்று சிறீலங்கா தெரிவித்தமை குறித்து அமெரிக்கா எதுவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.

4 November 2009

unp_logoஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவார் என்று அஞ்சி அவரை அமெரிக்காவில் சிறைப்படுத்த இந்த அரசாங்கம் சதி செய்கிறது என்று ஐ.தே.கட்சி எம்.பியான ஜோன் அமரதுங்க நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

4 November 2009

traitorsபுலம்பெயர் தமிழர்கள் அணி ஒன்று சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்யும் நிவாரண, புனர்வாழ்வு , மீழ் குடியமர்வு நடவடிக்கைகளில் தாம் திருப்தியடைவதாக கூறியுள்ளனர்.

4 November 2009

sl03102009001s[படங்கள்] சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜயத் ஜயசூரியவிற்கும், சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பெற்றீஷியா புட்டினாஸிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

4 November 2009

court_logoதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றமற்றவர்கள் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

4 November 2009

australia-shipஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் ஒருவரின் உடல் மட்டும் நேற்று மீட்கப்பட்டது. ஏனையவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

3 November 2009

vaiko-33இலங்கையிலுள்ள இந்து கோவில்கள் பலவற்றை இடித்தவர் ராஜபக்சே. என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.

3 November 2009

indo_shipசிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது.

3 November 2009

bombமட்டு. கல்லடி இராணுவ முகாம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவைச்சேர்ந்த சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3 November 2009

rajapakse_dmkmpசுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.

3 November 2009

hilary-clintonமுன்னாள் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா சரத் பொன்சேகாவைக் காப்பாற்ற கிலாரி கிளின்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

3 November 2009

siva300பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டமை பொலிஸ் அராஜகத்தின் உச்சக்கட்டம். இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் இலங்கை கொலைகார நாடாக மாறிவிடும் என்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

3 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக