சிறீலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தகால நிகழ்வுகள் பற்றி தற்போது வாஷிங்ரனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விரிவு… »
பிரதான செய்திகள்
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள்.
ஏனைய செய்திகள்
ஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் ஒருவரின் உடல் மட்டும் நேற்று மீட்கப்பட்டது. ஏனையவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக