திங்கள், 2 நவம்பர், 2009

தெரிந்த உண்மைகளை அமெரிக்காவில் வெளிப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகாவுக்கு சிறீலங்கா அரசு தெரிவிப்பு

australia-shipஅவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற ஈழத்தமிழ் ஏதிலிகள்  படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. படகில் இருந்து காணாமல் போன 11 பெரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

2 November 2009

sl_police0134மதுறு ஓயாப் வனப்பகுதியில் இனம் தெரியாத இரு உடலங்களைக் சிறீலங்காக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

2 November 2009

SriLanka Flagஅமெரிக்க அதிகாரிகளினால், விசாரணை செய்யப்படும் போது தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்தவேண்டாம் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா தெரிவித்துள்ளது.

2 November 2009

Tissa-Attanayakeமுன்னாள் இராணுவத் தளபதியும், கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்த காட்டு முனைப்பு சிறீலங்கா அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டமாக இருக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

2 November 2009

vimal-veeravansa_150இந்த வருடம் ஐ.நா. சபை அமர்வுக்காக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ச சென்றிருந்த வேளை, அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள், அவரை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 November 2009

tamilselvan31102009001sபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஆறு வேங்கைகளின் 2ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் இலங்கை - இந்திய கூட்டுச்சதியில் பலியான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு ஜேர்மனி நூறன்பேர்க் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

2 November 2009

refugees_tamilnaduதமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலிகள் முகாம்ங்களை மேம்படுத்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 12 இந்தியக் கோடி ரூபாக்களை ஒதுக்கியுள்ளார்.

2 November 2009

batticaதிருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 1486 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் நிலங்களை சிங்களவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் தமிழர்கள் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழர் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் மற்றும் பா.உ பாக்கியசெல்வம் அரியேந்திரன் ஆகியோர் கூறியுள்ளதாக த நேஷன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

2 November 2009

ca_eelam_flagஉலகெங்கும் பரந்து வாழும் தமிழரனான எமக்கு தமிழீழத் தேசியக் கொடியே எமது வரலாறு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தியாகங்களை எடுத்தியம்புகின்றது. இத்துடன் ஓர் நாட்டின் தேசியச் சின்னங்களானவை அந்நாட்டின், அந்த நாட்டு மக்களின், அரசியல் அபிலாசைகளைக் குறித்து நிற்கும்.

2 November 2009

australia-map-flagஇலங்கை சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்டின் நிலைப்பாடு அதிருப்தியளிப்பதாக அந்நாட்டு தொழிற்சங்க அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2 November 2009

gothapayaஇராணுவப் படைவீரர்கள் அரசியலில் ஈடுபடுவதனை சிறீலங்கா அரசாங்கம் ஒருபோதும் தடுக்காது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2 November 2009

arrest2009கைக்குண்டு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை வவுனியா குமாங்குளம் பிரதேசத்தில் சிறீலங்கா போலீசார் கைது செய்துள்ளனர்.

2 November 2009

telephone_recorderசிறீலங்கா அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2 November 2009

sarath-ponseke_sசிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியங்களை வழங்கவேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 November 2009

lorry_foodஇடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென நட்பு நாடொன்றினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட, கோதுமை மா மூடைகளும், பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

2 November 2009

nedumaranபோர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான பொன்சேகாவை அமெரிக்கா தடை விதிக்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே இந்தியாவில் தாராளமாக நுழைகிறார், அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.

2 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக