ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள்.
இந்த வருடம் ஐ.நா. சபை அமர்வுக்காக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ச சென்றிருந்த வேளை, அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள், அவரை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 1486 க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் நிலங்களை சிங்களவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் தமிழர்கள் மீளக்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழர் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் மற்றும் பா.உ பாக்கியசெல்வம் அரியேந்திரன் ஆகியோர் கூறியுள்ளதாக த நேஷன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலதிக செய்திகள்
- மகிந்த திருப்பதிக்கு சென்று வழிபட ஏற்பாடுகளை இந்திய அரசு செய்துக் கொடுத்துள்ளதை நான் கண்டிக்கிறேன்: பழ.நெடுமாறன்
- ஈழத்தமிழர்களும் உள்ளடங்கிருக்கலாம் என நம்பப்படும் படகு அவுஸ்திரேலியாவில் மூழ்கியுள்ளது
- கனடியக் கல்விமுறை பற்றி விபரம் வழங்கிய "கற்க கசடற" கல்விக் கண்காட்சி
- மகிந்த ராஜபக்சே குறித்து வலைத்தளத்தில் கருத்துரை எழுதியவர் கைது
- 5ம் தரப் புலமைப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு அதிக புள்ளி! 507 மாணவர்கள் பரீட்சையில் சித்தி!
- சிறீலங்கா கடற்படையில் சீனர்கள் கோடாலியுடன் – இந்தியா விசாரிக்க உத்தரவு
- அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை
- கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும்; கண்ணிவெடிகள் அகற்றப்படுவதென்பது அடிப்படையற்ற பொய் தமிழ்தேசியக்கூட்டமைப்பு
- பிரான்சின் மனிதநேயப் பணியாளர்கள் மீதான இறுதிக் கட்ட விசாரணையும், தீர்ப்பும்
- சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக உலக நாடுகள் அதிருப்தி : கனடிய லிபரல் கட்சி பிரமுகர் தெரிவிப்பு
- புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் நிலவுகிறது – ரிவிர
- வெளியிடங்களுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதியுங்கள்: யாழ். மக்கள் கோரிக்கை
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக