தமிழ்த் தேசியத்தின் தாற்பரியத்தை விளங்கிக்கொண்டவர்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள். தமிழ்த் தேசியத்தை ஒரு கட்டத் திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பொறுப்பும் பல்கலைக்கழக மாணவர்களிடமே உள்ளது என்று யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். விரிவு… »
பிரதான செய்திகள்
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
ஏனைய செய்திகள்
'பயங்கரவாதம்' என்ற முள்வேலியை சுற்றிப்போட்டுவிட்டு, இத்தனை காலமும் சர்வதேசத்தை ஏமாற்றி தமிழ் மக்களை அழித்து வந்தது சிறீலங்கா அரசாங்கம். அவர்களது வார்த்தைகளில் மயங்கி தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்த்த சர்வதேசத்திற்கு, சிறீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது காலம் கடந்து இப்போதுதான் புரியத்தொடங்கியுள்ளது.
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குஷ்னர் தமது மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்சுவா சிமெரெயை சிறீலங்காக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு பிரான்சினால் வழங்கப்பட வேண்டிய உதவிகள் மற்றும் ஏதுநிலைகள் தொடர்பிலும் ஆராயும் பொருட்டே அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கடற்படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, அவர்களுக்கு இந்தியா, ஆயுதங்களை வழங்கி பயிற்றுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மீனவர் ஒழுங்கமைப்புக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விசாரணைகளை தாம் நிராகரித்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட போதிலும், சிறீலங்கா அரசாங்கத்திடம் அனுமதி கோராமல் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என தாம் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸின்) ஒரு பிரிவான சனப் பிரதிநிதிகள் சபை இலங்கை தொடர்பில் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது. 421 வாக்குகளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை யில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபையின் ஏகமனதான தீர்மானம் என்றே கருதப்படக்கூடியது இது.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக