'பயங்கரவாதம்' என்ற முள்வேலியை சுற்றிப்போட்டுவிட்டு, இத்தனை காலமும் சர்வதேசத்தை ஏமாற்றி தமிழ் மக்களை அழித்து வந்தது சிறீலங்கா அரசாங்கம். அவர்களது வார்த்தைகளில் மயங்கி தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்த்த சர்வதேசத்திற்கு, சிறீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது காலம் கடந்து இப்போதுதான் புரியத்தொடங்கியுள்ளது.
பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குஷ்னர் தமது மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்சுவா சிமெரெயை சிறீலங்காக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு பிரான்சினால் வழங்கப்பட வேண்டிய உதவிகள் மற்றும் ஏதுநிலைகள் தொடர்பிலும் ஆராயும் பொருட்டே அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கடற்படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, அவர்களுக்கு இந்தியா, ஆயுதங்களை வழங்கி பயிற்றுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மீனவர் ஒழுங்கமைப்புக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விசாரணைகளை தாம் நிராகரித்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட போதிலும், சிறீலங்கா அரசாங்கத்திடம் அனுமதி கோராமல் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என தாம் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸின்) ஒரு பிரிவான சனப் பிரதிநிதிகள் சபை இலங்கை தொடர்பில் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது. 421 வாக்குகளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை யில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபையின் ஏகமனதான தீர்மானம் என்றே கருதப்படக்கூடியது இது.
மேலதிக செய்திகள்
- சிறீலங்கா பயங்கரவாதிகளால் கே.பி. கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்
- தமிழர் தாயகத்தில் சிறீலங்காவின் போர் நடவடிக்கையால் 397 பாடசாலைகள் அழிப்பு
- கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக ரூபாவதி கேதீஸ்வரன் நியமனம்!
- கச்சத்தீவைப் போல் அந்தமான் தீவுகளும் சிறீலங்காவுக்கு….?
- பருவமழையின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்
- விசாரணைக்காக சென்ற செல்வம் அடைக்கலநாதன் இதுவரை வீடு திரும்பவில்லை
- இதுவரை வெளிவராத…இலங்கைச் சித்திரவதை! நாலாவது மாடியில் பிரபாகரன் பெற்றோர்! : ஆனந்த விகடன்
- மாறிவரும் உலக ஒழுங்கிற்கமைய தற்காலிகமாக ஏற்பட்டுள்ள சார்பு நிலையினை நிரந்தரமானதாக்கி சுதந்திர தமிழீழம் காண்போம்: இரா.மயூதரன்
- படையினரால் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற மனைவியை 6 மாதங்களாக காணவில்லை: கணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு
- 4 வயது சிறுமியைக் கற்பழித்த 17 வயது சிங்கள கொடூரன் கைது
- தமிழீழ தேசியத்தலைவரின் தந்தையின் ஓய்வூதியக் கொடுப்பனவு ரத்து: ஓய்வூதிய ஆணையாளர் தகவல்
- சரத் பொன்சேகா நாடு திரும்பியுள்ளார்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக