பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் குஷ்னர் தமது மனித உரிமைகள் ஆணையாளர் பிரான்சுவா சிமெரெயை சிறீலங்காக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு பிரான்சினால் வழங்கப்பட வேண்டிய உதவிகள் மற்றும் ஏதுநிலைகள் தொடர்பிலும் ஆராயும் பொருட்டே அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கடற்படையினரின் தாக்குதல்களை சமாளிக்க, அவர்களுக்கு இந்தியா, ஆயுதங்களை வழங்கி பயிற்றுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மீனவர் ஒழுங்கமைப்புக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விசாரணைகளை தாம் நிராகரித்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா திவயின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் தம்மிடம் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட போதிலும், சிறீலங்கா அரசாங்கத்திடம் அனுமதி கோராமல் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என தாம் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸின்) ஒரு பிரிவான சனப் பிரதிநிதிகள் சபை இலங்கை தொடர்பில் மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றது. 421 வாக்குகளுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை யில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் அமெரிக்க சனப் பிரதிநிதிகள் சபையின் ஏகமனதான தீர்மானம் என்றே கருதப்படக்கூடியது இது.
மேலதிக செய்திகள்
- அரக்க குணம் கொண்ட சிங்களமும் தவிக்கும் தமிழினமும்
- தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்
- நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் அறிக்கை: வி.உருத்திரகுமாரன்
- செட்டிகுளம் தடுப்பு முகாமில் பெற்றோரை இழந்த 230 சிறுவர்கள்
- பம்பலப்பிட்டி கடலில் நடந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
- முகாமில் உள்ள மின்கம்பத்தின் கீழ் இருந்துதான் படித்தேன்: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய இடம்பெயர் மாணவன்
- சகோதரனைக் காப்பாற்றுமாறு மகிந்தா இந்தியாவிடம் உதவி!! உதவக்கூடாது என்கிறார் நெடுமாறன்
- அமெரிக்காவின் எந்தவொரு விசாரணைகளுக்கும் உட்படாது நாடு திரும்புகிறார் சரத்பொன்சேகா
- படகு மூழ்கி காணாமல் போன இலங்கையர்களை தேடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன
- சனாதிபதி மகிந்த ராஜபக்ச வன்னிக்குப் பயணம் செய்து படையினரைச் சந்தித்துள்ளார்!
- தமிழக முகாம்களுக்கு….
- பேராசிரியர் சிவத்தம்பி எடுக்க வேண்டிய முடிவு – உதயன் தலையங்கம்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக