மகசீன் சிறையில் அண்மையில் தமிழ் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இன்று நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. விரிவு… »
பிரதான செய்திகள்
விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் முடிவு சாத்தியமாகும் சூழ்நிலை திடுதிப்பென ஏற்பட் டமை பல தரப்புகளிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்று வித்திருக்கின்றது. குறிப்பாக இந்தப் பிராந்திய நாடுகளிலும் இவ் விடயம் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.
ஏனைய செய்திகள்
[படங்கள்] 15.11.09 அன்று நோர்வேயில், தமிழீழ மக்களைவைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அமைதியான முறையிலும் மக்களின் ஒத்துழைப்போடும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தமிழீழ கோட்பாட்டை உறுதியாக கடைபிடிக்கும் தமிழின மக்களின் மனதை பிரதிபலித்தது. நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகளுடன் நடைபெற்ற தேர்தலில் 2767 தமிழீழ வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவினை வழங்கினர்.
அரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் ஊடாக, ரட் அரசாங்கத்தால், இதுவரையில் 119 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை செவ்வாய்க் கிழமை முற்பகல் 12 மணிக்கு பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்னால், மனோ கணேசன் எம்.பி. தலைமையில் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.
நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை, சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது என கொழும்பு வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாகக் கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார்.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக