சனி, 7 நவம்பர், 2009

இடியட் இண்டியன்ஸ்… கோழைத் தமிழர்கள்!

india_navy_policeஇடியட் இண்டியன்ஸ்… கோழைத் டமிலர்களே….'' இப்படி ஆங்கிலத்திலும், சிங்களக் கடற்படையினர் கற்றுக் கொடுத்த அரைகுறைத் தமிழிலுமாக,  தடித்த வார்த்தைகளால் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைத் திட்டி, சிங்களக் கடற்படை வீரர்களுடன் இணைந்து விரட்டி அடித் திருக்கிறார்கள், சீன ராணுவ வீரர்கள்.
7 November 2009
karunaஓநாய் நெருங்குகிறது…ஆடுகள் ஒடுங்குகின்றன. ஓநாய் வருகிறது…மான்கள் நடுங்குகின்றன. ஓநாய் வந்துவிட்டது… முயல்கள் பதுங்குகின்றன. துப்பாக்கியை எடுத்து தோட்டக்காரன் குறிபார்க்கிறான்…ஓநாய் பதுங்குகிறது!
7 November 2009
achr_logoசிறீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரில் கண்ட வெற்றியை, அரசியல்படுத்தும் நோக்கிலேயே அடுத்து வரும் தேர்தல்களை நடத்தவிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
7 November 2009
france-flagகடந்த 1983ம் ஆண்டு முதல் இலங்கையில் இருந்துவரும் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பின் தூதர் பிரான்சுவா சிமெரி இன்று சனிக்கிழமை இந்தக் கோரிக்கையை சிறீலங்காவிடம் விடுத்துள்ளார்.
7 November 2009
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டத் தமிழர்கள் 'விடுவிக்கப்பட்டு' தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
7 November 2009
sri_lanka Flagமனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்கா, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ளது.
7 November 2009
vavuniya_floodபெய்து வரும் பருவ மழை காரணமாக வவுனியாத் தடுப்பு முகாங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் இடர்பாடுகளைச் சந்தித்துள்ளனர்.
7 November 2009
imf_logoசிறீலங்காவுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி வழங்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர் டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார்.
7 November 2009
sampanthan_tnaயுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் அவசரகாலச் சட்டம் நீடிப்பது நியாயமானது அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
7 November 2009
thehinduஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கொசோவா போன்ற நிலமை சிறீலங்காவிலும் வந்துவிடக்கூடாது என்பதில் தாம் அக்கறையாக இருப்பதாக சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜிவ விஜேசிங்ஹ இந்திய பத்திரிகையான இந்துவுக்கு பேட்டியளித்துள்ளார்.
7 November 2009
FilmReelஇந்தியா, ஹொங்கொங், ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட திரைப்படங்கள் சிறீலங்கா தணிக்கைக் குழுவினரால் திரையிடப்பட்டு பார்த்த பின்னர் தணிக்கைக்கு உள்ளாகின்றன.
7 November 2009
ranil001sபௌத்த மதக் கோட்பாடுகளை பின்பற்றி நாட்டை நல்லவழியில் ஆட்சி செய்யாது நாடு முழுவதிலும் பௌத்த தூபிகளை அமைப்பதில் பயன் எதுவுமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
7 November 2009
selvam_adaikalanathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒரு மாத காலத் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
7 November 2009
unmanவவுனியாவில் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதல் ஒன்றின் போது சிறீலங்காப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
6 November 2009
nov27எம்மவர்கள் கலங்கிப் போயுள்ளனர். எதைச் செய்யலாம், எதைச் செய்யாமல் தவிர்க்கலாம் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறான ஒரு நேரத்தில் தான் மகத்தான நவம்பர் மாதம் பிறந்திருக்கின்றது. இவ்வாறு கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் இதழ் தமது ஆசிரியர் தலையங்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.
6 November 2009
barbwire'பயங்கரவாதம்' என்ற முள்வேலியை சுற்றிப்போட்டுவிட்டு, இத்தனை காலமும் சர்வதேசத்தை ஏமாற்றி தமிழ் மக்களை அழித்து வந்தது சிறீலங்கா அரசாங்கம். அவர்களது வார்த்தைகளில் மயங்கி தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்த்த சர்வதேசத்திற்கு, சிறீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது காலம் கடந்து இப்போதுதான் புரியத்தொடங்கியுள்ளது.
6 November 2009
viking_shipஇலங்கை ஏதிலிகள் 78 பேருடன் தமது கடற்பரப்பில் தரித்திருக்கும் ஒசியன் விக்கிங் கப்பலை மேலும் ஒரு வார காலத்திற்கு தரித்திருக்க இந்தோனேசியா இன்று அனுமதி வழங்கியுள்ளது.
6 November 2009
eu-flagநம்பகரமான தகவல்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியமும் பொதுநலவாய நாடுகளும் சிறீலங்காவின் இராணுவத் தளபதிகளுக்கு பயணத்தடை விதிப்பதற்கான நடைமுறைகளை தொடங்கியுள்ளன.
6 November 2009
thalai_euஇந்தியாவின் இடம்பெயர்ந்த அரசுகளின் தோற்றத்திற்கு முதலாளித்துவ வல்லரசின் குடியேற்ற வாதம் காரணமாக அமைந்தது. ஆனால் திபெத்தின் புலம்பெயர் அரசின் தோற்றத்திற்கு சோசலிசவாத மேலாண்மையும், நில ஆக்கிரமிப்பும் காரணமாக அமைந்தது.
6 November 2009
parliament_srilankaசிறீலங்காவில் அமுலில் உள்ள அவசரகாலச் சட்ட நீட்டிப்பு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பு இன்று நடந்தது. இதில் 95 வாக்குகள் அச்சட்டத்தி மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்றும், 17 வாக்குகள் அதற்கு எதிராகவும் கிடைத்துள்ளன.
6 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக