செவ்வாய், 3 நவம்பர், 2009

மகிந்தவை குறிவைக்கும் மரணப் பொறிகள்

ausi shipஇலங்கை ஏதிலிகளை ஏற்றிச் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு அருகில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 பேருடன் சென்ற இந்தப் படகுடன் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விரிவு… »

பிரதான செய்திகள்

sarath_mahindaதனது கிரீன்காட் விசாவை புதுப்பிக்கவும், மற்றும் சில சுய அலுவல்கள் காரணமாகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த முன்னாள் இலங்கையின் இராணுவத் தலைமை அதிகாரியான சரத் பொன்சேகாவினை அமெரிக்க அரசு, மனித உரிமைமீறல் தொடர்பாகவும், இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் பல விசாரணைகள்…….

3 November 2009

thalaivar2008ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் நாள் , மாவீரர் வாரத்தின் இறுதி நாள்; தாயக விடுதலைக்காக தம்முயிரினை ஈந்த மாவீரர்களின் புனிதக் கல்லறைகளில் சிரந்தாழ்த்தி, மலர்தூவி, ஒளிதீபமேற்றும் உன்னதநாள்; நம் தாயக விடுதலைக்காக இதுவரை நாம் இழந்தவற்றை மீள்நினைத்து இழந்த மாவீரர்களின் இலட்சியக் கனவினை ஈடேற்ற அவர் வழிச்சுவடு தொடருவோம் என உறுதியெடுத்துக் கொள்ளும் வீரநாள்; ஈழத்தமிழர்கள் அனைவரிற்கும் ஒரு எதிர்பார்ப்பினைக் கொடுக்கும் நாள்; அன்றுதான் நம் தேசியத்தலைவர் அவர்களின் கருத்துக்களை அவரது உரையின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் அரிய நாள்.

3 November 2009

muthukumar29januaryநீங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய பத்து தமிழர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி முத்துக்குமாருக்கு கொடுப்பீர்களா? ஆமாம் சில நாட்களாகவே முத்துக்குமாரின் நினவுகள் ஏனோ என்னுள் அலைமோதியபடி இருந்தது. அவன் ஒரு சிறந்த லே.அவுட் ஆர்ட்டிஸ்ட். நன்கு எழுதத் தெரிந்த பத்திரிகையாளன்.

3 November 2009

australia-shipஅவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற ஈழத்தமிழ் ஏதிலிகள்  படகு ஒன்று, அவுஸ்திரேலிய வடமேற்கு கடற்பரப்பில் கடலில் இன்று மூழ்கியுள்ளது. படகில் இருந்து காணாமல் போன 11 பெரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

2 November 2009

ஏனைய செய்திகள்

australia-shipஆஸ்திரேலியாவின் வட மேற்குக் கடலில் மூழ்கிய படகில் பயணித்த 12 இலங்கைத் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இதில் ஒருவரின் உடல் மட்டும் நேற்று மீட்கப்பட்டது. ஏனையவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. கடலில் மூழ்கிப் போனவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமானப்படையும், மீட்புப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

3 November 2009

sniper-header-mahindaசிறீலங்கா அரசு தமிழ் மக்களிற்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டி காட்டி இருந்தது அதனை இலங்கை அரசு வாசிக்காமலே உடன் மறுத்திருந்தது.

3 November 2009

vaiko-33இலங்கையிலுள்ள இந்து கோவில்கள் பலவற்றை இடித்தவர் ராஜபக்சே. என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.

3 November 2009

indo_shipசிங்கள இனவாதக் கொடூரங்களிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது ஈழத் தமிழர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி கடல் கடந்து செல்வது மட்டுமே. 1983 கறுப்பு ஜுலைக்குப் பின்னரான இந்தக் கடல் கடக்கும் முயற்சிகள் பல பரிதாபகரமான முடிவுகளையும் எமது உறவுகளுக்குத் தேடித் தந்துள்ளது.

3 November 2009

bombமட்டு. கல்லடி இராணுவ முகாம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவைச்சேர்ந்த சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

3 November 2009

rajapakse_dmkmpசுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.

3 November 2009

hilary-clintonமுன்னாள் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா சரத் பொன்சேகாவைக் காப்பாற்ற கிலாரி கிளின்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அறியப்படுகிறது.

3 November 2009

siva300பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டமை பொலிஸ் அராஜகத்தின் உச்சக்கட்டம். இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் இலங்கை கொலைகார நாடாக மாறிவிடும் என்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

3 November 2009

gunman_unfaceசிறீலங்கா துணை இராணுவக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கப்பம் பெற்று வருவதாக படைத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

3 November 2009

unp_logoசிறீலங்கா நாடாளுமன்றில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

3 November 2009

arrest2009தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய கூட்டுறவுச் சங்க முகாமையாளர் ஒருவரை மன்னாரில் வைத்து கைது செய்துள்ளதாக கண்டி புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

3 November 2009

thennaiஇலங்கையில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை ஆராய்வதற்காக இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் தி.மு. ஜயரத்னா தெரிவித்தார்.

3 November 2009

mathippu27112009தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளான நவம்பர் 27ல் இப்புனிதர்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், அவர்களின் இரத்த உறவுகளையும் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரான்சில் இவ்வாண்டும் வழமைபோல் நடைபெறவுள்ளது.

3 November 2009

sarath-ponseke_sஎனது தனிப்பட்ட நன்மைகளுக்காக நான் எவரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவிலுள்ள ஹெல உறுமயவின் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

3 November 2009

kpகைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருக்கும் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீதான விசாரணை தொடர்பாக, சிறீலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதென்று கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 November 2009

Medicinesசிறீலங்காவுக்கு மருந்துப் பொருட்களை விநியோகம் செய்யும் சுமார் ஆறு மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக