முதன்மைச்செய்தி November 2nd, 2009
கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு. விரிவு… »
பிரதான செய்திகள்
ஏனைய செய்திகள்
கடந்த 2007 ஏப்ரல் 1 ம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களின் தாயக செயற்பாட்டாளர்களின் இறுதி கட்டவிசாரணைகள் பாரிஸ் மத்திய நீதிமன்றத்தில் பிரதான மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் கடந்த 12 ம் திகதி முதல் நடைபெற்று வருவதை யாவரும் அறிந்ததே அதன் இறுதி விசாரணைகள் 26 ம், 27ம், 28 ம் திகதிகளில் நடைபெற்றன.
சிறீலங்கா அரசு தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்து வாழும் ஏதிலிகளையும் நடத்தும் விதம் பற்றி உலக நாடுகள் பல அக்கறை கொண்டுள்ளன. அந் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் அடைந்துள்ளன.என கனடாவின் லிபரல் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அக் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பேச்சாளருமான போப் றே தெரிவித்தார்.
நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலை நாட்டியதுடன் யாழ். குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தையும் நடைறைப்படுத்தி வருகிறோம் என அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் சுதந்திரமாகவும் குறைந்த செலவிலும் நேரடியாக செல்ல முடியாத நிலையுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு இன்றியும் எமக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி செயற்படுவதன் காரணமாக உலக செம்மொழி மாநாடு பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர் என பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறினார்.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக