சிம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஜூலை, 2011

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்: டி.ராஜேந்தர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தர் கூறுகிறார்.

சமீபத்தில் வெளியான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த "வானம்" படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது.

அதில் ”அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்" என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது.

இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது:

சிம்புவின் "வானம்" படத்தின் 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை தயார் செய்தது நான் தான்.

இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே, சினிமா வாழ்க்கையில் சிம்புவும் எம்.ஜி.ஆர் போன்ற நிலைமையை அடைய வேண்டும், அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம்.

அதற்காக சிம்புவை நான் தயார் செய்து வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான்.

மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர் எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன்.

எம்.ஜி.ஆர் மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லா தகுதியும் இருக்கிறது, நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான்.

தற்போது நான் "ஒரு தலைக்காதல்" படத்தை இயக்கி வருகிறேன், இந்த படம் ஒரு அழகான காதல் கதை.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன்.

விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன் என்று அவர் கூறினார்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

ஒஸ்தி படத்திற்காக சிம்பு தேடும் கவர்ச்சி நடிகை

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'தபங்' படத்தை தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு தகுந்த மாதிரி ரீமேக் செய்து வருகிறார்கள்.

இந்த 'ஒஸ்தி' படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் தரணி இயக்கத்தில், சல்மான் நடித்த நாயகன் கதாபாத்திரத்தில் சிம்பு ஆர்ப்பாட்டமாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வரும் கலக்கலான குத்தாட்ட பாடலில் ஆட்டம் போட நயன்தாரா, மலைகா அரோரா, ஸ்ரேயா சரண் ஆகிய நடிகைகளை நாயகன் சிம்பு அணுகியுள்ளாராம்.

ஆனால் சிம்பு மற்றும் இயக்குனர் தரணி இருவரும் இதை மறுத்துள்ளார்கள்.

நாங்க தற்போது படத்தின் வசனக்காட்சிகளை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அடுத்த மாதம் முதல் வாரம் வரை, இந்த படப்பிடிப்பு நடைபெறும்.

இந்தி படத்தில் வருகிற மாதிரி தளம் போட்டு சண்டைக்காட்சிகளை எடுக்காமல் நிஜமாகவே ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவுகிற காட்சியை எடுத்துள்ளோம்.

இப்படி சவாலான சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளோம்.

”ஒஸ்தி” படத்தின் பாடல்கள் மொத்தத்தில் பட்டய கிளப்பும் என்பதை மட்டும் இப்போது சொல்லமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.