மும்பையில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டியினை காணவரும் போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழித்தெழு இளைஞர் இயக்கம், உலகத்தமிழர் பேரமைப்பு, பெரியார் திராவிடர் கழகம், பாரதீய ஜனதா கட்சி, நாம் தமிழர்கட்சி சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து மகிந்தவின் கொடும்பாவி எரித்துப்போராட்டம் நடத்தியுள்ளனர். நிகழ்விடத்திலிருந்து நமக்களித்த செவ்வி இணைப்பு மேலும்>>
-
மகிந்த வருகையை முன்னிட்டு மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கத்தினர் கைது
Posted: Sat, 02 Apr 2011 02:41:20 +0000
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண சிறீலங்கா அரசத்தலைவர் மகிந்த இராசபக்சே மும்பை செல்கிறார். இந்நிலையில் மும்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை விழித்தெழு இளைஞர் இயக்கத்தைச்சேர்ந்த 8 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். மகிந்த இராசபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த மும்பை விழித்தெழு இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் ஐபா பிரச்சினையின் பொழுது சல்மான்கான் படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்ட 8 பேரை நேற்றிரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. அவ் இயக்க பொறுப்பாளர்கள் [...]
-
தேசத்தாயின் அஸ்தி குமரிமாக்கடலில் கரைப்பு
Posted: Thu, 31 Mar 2011 20:23:02 +0000
தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயார் "தேசத்தாய் பார்வதியம்மாள்" அவர்களின் இறுதி அஸ்தி இன்று (31.03.2011) குமரிமாக்கடலில் கரைக்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அய்யா பழ.நெடுமாறன் மற்றும் உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மறுமலர்ச்சி திமுக தொண்டர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். [காணொளி 2ஆம் இணைப்பு] தேசத்தாயின் அஸ்தியானது மாதனி விடுதியிலிருந்து வைகோ, பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக குமரி முனைக்கு மக்கள் திரளுடன் சென்றனர். இந்நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக [...]
-
கச்சத்தீவு தமிழகத்துடன் இணைக்கப்படும், மீனவர்களுக்கு ஆயுதப்பயிற்சி – மக்கள் மாநாடு கட்சி தேர்தல் அறிக்கை
Posted: Thu, 31 Mar 2011 18:19:48 +0000
தமிழக சட்டமன்றத்தேர்தலையொட்டி மக்கள் மாநாடு கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் " கச்சத்தீவு தமிழகத்துடன் இணைக்கப்படும், மீனவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் முழு அறிக்கை…
-
குடந்தை பாபநாசத்தில் நாம் தமிழர் கட்சித்தொண்டர்களை தாக்க முயன்ற காங்கிரஸார் கைது
Posted: Thu, 31 Mar 2011 17:26:02 +0000
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில் ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின் மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் [...]
-
கரும்புலி மேஜர் ஆந்திரா/தாயகம் அவர்களின் வீரவணக்க நாள்
Posted: Thu, 31 Mar 2011 13:25:52 +0000
கரும்புலி மேஜர் ஆந்திரா/தாயகம் விநாயகமூர்த்தி சுதர்சினி மருதங்கேணி, யாழ்ப்பாணம் அவள் குறும்புக்காரி ஏதாவது கதை சொல்லி மற்றவர்களை கொல்லெனச் சிரிக்கவைத்துவிடுவாள். சின்ன வயதில் சைக்கிள் ஓடப்பழகிய ஆரம்ப நாட்களில் இவளுக்குச் சைக்கிள் ஓடப்பழக்கியது அண்ணன்தான். மண் ஒழுங்கைகள் எல்லாம் அவன் சைக்கிளைப் பிடிக்க அவள் ஓடுவாள். ஒவ்வொரு அடிதூரம் போகவும் அவன் கையை விட்டுவிடுவானோ என்ற பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பாள். "நேர அந்த வீட்டைப்பார்… நேர அந்த வீட்டைப்பார்" என்று அண்ணன் அடிக்கடி கத்துவான். அவள் [...]
-
மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் ஈழத்தமிழ் ஏதிலிகள்
Posted: Thu, 31 Mar 2011 01:36:17 +0000
மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் ஏதிலிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது. சட்டபூர்வமாக மலேசியாவில் தங்குவதற்கு அனுமதியற்ற நிலையில், வேலைவாய்ப்பு -கல்வி – மருத்துவம் ஆகிய அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர். இதேவேளை, சட்டபூர்வ வதிவிட அனுமதி பத்திரம் அற்ற நிலையில் உள்ளுர் கண்காணிப்பு காவலாளிகளால், ஏதிலிகள் கைது செய்யப்பட்டு, இரகசியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அச்ச நிலையும் தோன்றியுள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே யுஎன்சீஆர் ஐநா நிறுவனம் உட்பட பல உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் [...]
-
பிரித்தானியாவில் சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் – ஒன்பது பேர் பட்டினிப்போராட்டம் ! மூவர் தற்கொலை முயற்ச்சி !!
Posted: Wed, 30 Mar 2011 04:36:08 +0000
பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூவர் தற்கொலை செய்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Harmondsworth Immigration Removal Centre Colnbrook by pass West Drayton UB7 OHB இந்த முகாமில் பெருவாரியான ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. முகாமில் இருந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாமுக்கு திரும்பி [...]
-
தேசத்தாய் பார்வதியம்மாளின் ஈமச்சாம்பல் 31 ஆம் திகதி குமரிமாக் கடலில் கரைப்பு! வைகோ, பழ.நெடுமாறன் பங்கேற்பு!
Posted: Tue, 29 Mar 2011 10:49:01 +0000
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் ஈமச்சாம்பலை கன்னியாகுமரி கடலில் கரைக்கும் நிகழ்ச்சி மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும்>>
-
தமிழக தேர்தல் 2011 மக்கள் சந்திப்பு
Posted: Tue, 29 Mar 2011 10:28:27 +0000
கடந்த ஏப்ரல் 26 சனிக்கிழமை தமிழர் பறை குழுவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக தேர்தல் குறித்து மக்களிடம் கருத்துகளை காணொளியாக பதிவு செய்தனர். இக்குழுவில் செந்தில்குமார், ராஜ்குமார் பழனிசாமி, சந்தியா ராஜ்குமார், ரதீஷ் முதலானோர் பங்குபெற்றனர். மேலும்>>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக