புதன், 26 மே, 2010

சிறிலங்காவில் கொலை இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

வர்த்தக வரிச்சலுகை வழங்கப்படுவது தொடர்பில் சாதகமான பதிலை வழங்க முடியாது: ஐரோப்பிய ஒன்றியம்

வர்த்தக வரிச்சலுகை தொடர்பில் சிறீலங்காவுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதற்கு விரும்பம் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் கருத்துக்களை கூற மறுத்துவிட்டது. மேலும் »

சிறிலங்காவில் கொலை இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார். மேலும் »

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை

சிறிலங்காப்படை ஆக்கிரமிப்பால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பாடசாலைகள் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. பாடசாலைக் கட்டிடங்கள் இருந்த போதும் தற்காலிக தறுப்பாள் கொட்டகைகளிலே பாடசாலைகள் இயங்கி வருகின்றது. மேலும் »

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் »

கொழும்பு திரைப்படவிழாவை ஃபிக்கி தவிர்க்க வேண்டும் – கமலகாசனுக்கு மே 17 அறிக்கை

ஃபிக்கியின் தலைவர்கள் புறக்கணிப்பது அல்ல முக்கியம், அந்நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தாமல் ஃபிக்கி தவிர்க்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளாகும் என்று நடிகர் கமலகாசனுக்கு மே 17 இயக்கம் பதில் தெரிவித்துள்ளது. மேலும் »

நிபுணர் குழுவை அமைப்பதை பான் கீ மூன் கைவிடக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருந்தார். அந்தத் திட்டத்தை அவர் கைவிடக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் »

அரசியல் இராஜதந்திர வியூகத்தை கூட்டமைப்பு அமைக்க வேண்டும்

போர் நடந்த வன்னிப் பெருநிலப்பரப்பிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து பார்வையிட்டனர். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஒரு வருடத்திற்குப் பின்பான அவர்களின் அதிர்ச்சி அவர்கள் மட்டில் ஏற்புடையதாக இருக்கலாம். மேலும் »

மனித உரிமைகளை விடுத்து வர்த்தக நடவடிக்கைகளை பார்ப்பது அமெரிக்காவுக்கு நல்லது: சிறீலங்கா

சிறீலங்காவில் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளவது என்பது தொடர்பில் தான் அமெரிக்கா சிந்திக்க வேண்டுமே தவிர மனித உரிமைகள் குறித்து பேசுவதை அது நிறுத்த வேண்டும் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். மேலும் »

ஜி-15 நாடுகள் ஊடாக அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க சிறிலங்கா முயற்சி

தற்போது ஜி-15 நாடுகளின் தலைமைப்பொறுப்பை தன்வசப்படுத்தியுள்ள சிறிலங்கா அதனை பயன்படுத்தி அந்த அமைப்பில் உள்ள நாடுகளின் ஊடாக அமெரிக்காவுக்கு அழுத்தங்களை கொடுத்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

யுத்தக் குற்றங்கள் குறித்து ஐ.நாவுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலான சர்வதேச நிபுணர் குழுவை அமைத்தே தீருவேன்: பான் கீ மூன்

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் குறித்து ஐ.நாவுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலான சர்வதேச நிபுணர் குழுவை அமைத்தே தீருவார் என்று ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். மேலும் »

அரசியல் தீர்வின் முதல் வரைபை இந்தியாவிடம் மகிந்தா வழங்குவாராம்!

அரசியல் தீர்வுத்திட்டதின் முதல் வரைபு இந்தியாவிடம் கையளிக்கப்படும் என சிறீலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் »

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடுகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக உடன்பாடுகளை கைவிடுமாறு தென்னிலங்கை சிங்கள மக்கள் சிறீலங்கா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் »

இறுதி யுத்த களத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டும்…?

சிங்கள தேசத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போரின் இறுதி நாட்களில் பலியானவர்கள் தொகை 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை என ஐ.நா. கண்க்குக் கூறியது. அந்த யுத்த களத்திற்கு மனித நேயப் பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுயாதீனமாகத் திரட்டப்பட்ட முடியாத நிலையில் வெளி வந்த தொகை 30,000 முதல் 50,000 வரை என்று கூறப்பட்டது. மேலும் »

உறவுகளே கீழ்க்காணும் இணைப்பில் கையொப்பம் இடவும்

ஐம்பதினாயிரம் [50,000] கையொப்பம் கிடைத்தால் ஐ.நா இந்த கோரிக்கையை நிராகரிக்கமுடியாது. மேலும் »

ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின்
வேட்கையில்
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
ஈழ உயிர்ப்புகள்; மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக