தமிழின அழித்தொழிப்பு யுத்தத்தில் சீனா முதன்மையான பாத்திரம்
தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசு முன்னெடுத்த இனவழித்தொழிப்பு யுத்தத்தில் முதன்மையான பாத்திரத்தை சீனா வகித்தமைக்கான தகவல்கள் தற்பொழுது மேற்குலக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. மேலும் »
போர் நிறைவடைந்த பின்னரும் கொமாண்டோ படையினருக்கு சிறீலங்கா அரசு பயிற்சி
போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு ஒருபுறம் தெரிவித்துவரும் போதும் மறுபுறம் அது தனது படைபலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த வாரமும் சிறப்பு கொமோண்டோ பயிற்சியை நிறைவு செய்த ஒரு அணி வெளியேறியுள்ளது. மேலும் »
கதிர்காமம் பிள்ளையார் கோவில் பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில்?
கதிர்காமத்தில் அமைந்திருக்கும் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தை பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சிங்கள அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »
முகாம் மக்களின் நிலையை உலக நாடுகளுக்கு மறைப்பதே சிறீலங்காவின் நோக்கம்: சம்பந்தன்
தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க அனுமதி மறுத்திருப்பதிலிருந்தே, சிறிலங்க அரசு தமிழர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதனை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சம்பந்தன் கூறியுள்ளார். மேலும் »
ஜி.எஸ்.பி.பிளஸ் மீண்டும் வழங்கப்படும் அபாயம்! தடுக்குமா தடுக்குமா புலம்பெயர் தமிழர் சமூகம்?
நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து தற்போது பிரசல்ஸிற்கு விஜயம செய்துள்ள சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கு இலங்கை நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளனர். மேலும் »
பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
யாழ்ப்பாணக் குடாநாடு ஏதோவொரு வகையில் குழப்பத்தைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீண்டகால யுத்தத்தை அனுபவித்த நாம் அனுபவிப்புக்கான அறுவடை எதுவுமின்றி எல்லாவற்றையும் இழந்ததுதான் மிச்சம் மேலும் »
சிங்களவர்களை குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவில் 3,920 ஏக்கர் காடுகள் அழிப்பு
சிறிலங்காவில் நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது என்ற போர்வையில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவில் உள்ள அடர்ந்த காடுகள் அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
இந்தியாவுடனான உறவை கவனிக்க பசில் நியமனம்
இந்தியாவுடனான உறவுகளை கவனிப்பதற்கு சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
அவதூறு பரப்பியதற்காக த ஏசியன் ரைபூன் ஆசிரியருக்கு 125,000 குரோணர்கள் அபராதம்
நோர்வேயை தளமாக கொண்ட ஊடகவியலாளர் நடராஜா சேதுரூபன் மீது அவதூறுகளை பரப்பியதற்காக த ஏசியன் ரைபூன் ஊடகத்தின் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் 125,000 குரேணர்களை அபராதமாக செலுத்தவேண்டும் என சுவிஸ் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் »
நக்கீரன் கோபால் கதைக்கருவில் இந்திய சிறீலங்கா அரசின் கூட்டுத்தயாரிப்பில் புதிய திரைப்படம் -சூரிய புத்திரன்
"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது. மேலும் »
இந்தியப் படைகளின் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் சிங்களம்
தமிழீழ தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இந்திய ஜவான்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும் »
மட்டக்களப்பில் சிறீலங்கா அதிரடிப்படையினரால் வீடுகள் சோதனை
மட்டக்களப்பில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் மக்களின் வீடுகள் சோதனையிடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »
மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரம்
மணலாறு மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மகிந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் »
எம்.ஆர்.ராதாவும் எஸ்விசேகரும், திருமாவும் குஷ்புவும் -இளமாறன்
திராவிட முன்னேற்றக் கழகம் 1949ல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் அசைவுகள், அதன் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்வியல் கலாச்சார தன்மைகளோடு இணைந்தே வந்திருக்கிறது. அதற்கு அடிப்படை காரணம், திரைப்படம் எனும் ஊடகத்தை திராவிட முன்னேற்ற கழகம் தமது முழு ஆதிக்கத்திற்கு கொண்டு வந்ததே என்பதை நாம் அறிவோம். மேலும் »
சிங்கள தேசத்தின் இனப்படுகொலைக் காட்சிகளால் – காந்தி தேசம் அம்மணமாகக் காட்சி!
புலம்பெயர் தமிழர்களின் மனச்சாட்சிக்குச் சவாலாக அண்மையில் சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீது நடாத்திய கோரப் படுகொலைகளின் காட்சிப் படங்கள் வெளியாகி வருகின்றன. மேலும் »
தசை நார்கள் கிழிந்தபோதும்… -கண்மணி
பிரளய நெருப்பை
அணைக்க நினைக்கும்
மூடர்களின் மாதிரிக்கு
ஒரு துளி. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக