|
நடுக்கடலில் ஈழத்தமிழர்கள் 75 பேர் மலேசியா போலீசாரால் சுற்றிவளைப்பு
இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாட்டில் ஏதிலியாக தஞ்சம் அடைய சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட 75 ஈழத்தமிழர்கள் சென்ற படகை மலேசியா காவல்துறையினர் 8 மணிநேரத்திற்கு முன்பு நடுக்கடலில் சுற்றிவளைத்துள்ளனர். மேலும் »
ஈழமக்களுக்கு மருந்து கடத்தியதாக நாம் தமிழர் பொறுப்பாளர் முத்துகுமாரை கைது செய்ததைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈழத்திலே படுகாயமடைந்துள்ள மக்களைக்காக்க மருந்துப்பொருட்கள் அனுப்பியதாக நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப.முத்துக்குமார் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து ஈரோடில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் »
பண்டார வன்னியன் நினைவுசின்னம் சிங்கள காடையர்களால் உடைப்பு
தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் சிறிலங்காவின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலை மடு பிரதேசத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் »
யாழ்சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாநிலைப் போராட்டம்
இன்று முதல் யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 அரசியல் கைதிகள் தம்மீதான விசாரணைகளை அநுராதபுரம் உட்பட்ட தென்னிலங்கை நீதிமன்றங்களுக்கு மாற்றவேண்டாம் என கோரி உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. மேலும் »
அரசுத் தலைவர் செயலக மேற்பார்வைப் பொறுப்பு நாமலிடம் – பசில் அகற்றம்
சிறீலங்கா அரசுத் தலைவரது அலுவலக மேற்பார்வைப் பொறுப்பை தனது சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்சவிடம் இருந்து, தனது மகன் நாமல் ராஜபக்சவின் பொறுப்பிற்கு சிறீலங்கா அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச மாற்றியிருக்கின்றார். மேலும் »
மோதல் சம்பவம் ஒன்றில் ரத்மலானயில் விமானப்படைவீரர் ஒருவர் பலி
வெடபொல வத்த பிரதேச மக்களுக்கும் ரத்மலான பெலக்கட சந்தியில் விமானப்படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் விமானப்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் »
இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான வாய்ப்பாக தேர்தல் வெற்றியை பயன்டுத்துக! அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வேண்டுகோள்!!
நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பெற்றிருக்கும் வெற்றியை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான காத்திரமான முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »
பெண்கள் விடுதலை பெற்று வருவதற்கு விடுதலைப் புலிகளே காரணம்! – இன்டர் பிறஸ்
பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளிலில் இருந்தும் யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது சிறிதாக விடுதலை பெற்று வருவதாக Inter Press Service – IPS தெரிவித்துள்ளது. மேலும் »
மீண்டும் மீண்டும் இந்தியா விபரீதத்தை விதைத்து வருகிறது தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது: வைகோ
பார்வதி அம்மாளை குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து சென்னை எழும்பூரில் மதிமுக. சார்பில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றிய வைகோ "ராஜபக்சே திருப்பதி கோவிலில் ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்டார். அவரது குழந்தைகள் பெங்களூரில் கிரிக்கெட் பார்க்க வேண்டுமா? மீண்டும் மீண்டும் விபரீதத்தை விதைத்து வருகிறீர்கள். தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது" என்று கூறியுள்ளார். மேலும் »
இனி எங்க பார்வதி அம்மாவை திருப்பி வா என்று அழைத்தால் காரித்துப்பும் – இயக்குநர் சீமான்
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டமாக மாறியது.பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், மேலும் »
தமிழீழம் அடையும்வரை -கண்மணி
ஒடுக்குமுறைக்கு எதிராக நமது குரலோடு சேர்ந்து செயலும் எழ வேண்டும். ஜனநாயக பண்புக்கான ஒடுக்குமுறை என்பது மக்கள் திரளின் மீது திணிக்கப்பட்ட ஒரு அடக்குமுறை. ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள், அவர்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறையைக் குறித்து சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேலும் »
இரண்டாவது தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறப்பு
சிறிலங்காவில் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் இரண்டாவது தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டது. மேலும் »
ஓமந்தையில் பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர் கைது
பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் நேற்று மாலை ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் »
மாற்றுக் கருத்துடையோரை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் – சரத் பொன்சேகா
மாற்றுக்கருத்துடையவர்கள், மாற்றுச் சிந்தனையுடையவர்களை ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் என்றுக்கூறி கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் »
யாழில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில், கடந்த 15 ஆம் திகதி காணமல் போனதாக கூறப்பட்ட வயோதிபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் »
ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பிரிகிறோம் – பிரபா கணேசன்
தேசிய பட்டியலில் மனோ கணேசனுக்கு இடம் வழங்காமையால் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆளும் கட்சியுடன் இணையும் நிலை எழுந்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் அறிவித்துள்ளார். மேலும் »
சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் கூடியது – சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டார்
சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதனையொட்டி கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் »
மகிந்த குடும்பம் மீண்டும் ஆட்சியில் – புதிய சபாநாயகராக மகிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ச
சிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் இன்று காலை கூடியுள்ள நிலையில்,அதன் புதிய சபாநாயகராக அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் »
நாட்டை துண்டாடும் நோக்கில் ததேகூ, முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு -எல்லாவெல
சிறீலங்கா அரசாங்கம் சம்பந்தன், ஹக்கீம் கூட்டணியின் நிபந்தனைகளை நிராகரிக்கவேண்டும் எனவும் அவை நாட்டை துண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டவை எனவும் ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். மேலும் »
புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டம்! 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய நாடாளுமன்றம் இன்று காலை 8.45 மணிக்கு முதல் தடவையாகக் கூடியதும் ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்ற நிகழ்வு இடம்பெறும். மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக