வெள்ளி, 19 மார்ச், 2010

“தமிழ் மக்கள் – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” த.தே.ம.முன்னணியின் தேர்தல் அறிக்கை

சிறிலங்காவில் அமைதியைக் கட்டி எழுப்புவதில் தங்களுக்கு இருக்கும் பெரும் பங்கை யாழ்ப்பாணப் பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்

சிறிலங்காவில் அமைதியான சமூகத்தைக் கட்டி எழுப்புவதில் தங்களுக்கு இருக்கும் பெரும் பங்கை  வலியுறுத்தி வருகின்றனர்  யாழ்ப்பாணப் பெண்கள். மேலும் »

"தமிழ் மக்கள் – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" த.தே.ம.முன்னணியின் தேர்தல் அறிக்கை

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மேலும் »

மகிந்தாவின் பிறவி குணம் – கண்மணி

ஆழ குழி தோண்டி போட்டு மறைத்தாலும் அதிலிருந்து ஒருநாள் உண்மை வெளிவரும். உண்மையை மறைக்க முடியாது. இரண்டும் இரண்டும் நான்கு என்றால் நான்குதான். மேலும் »

வாக்குகள் எண்ணும் நிலையத்திற்குள் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதியில்லை

தேர்தல்கள் திணைக்களத்தினால் அழைக்கப்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மட்டுமே கடந்த காலங்களில் வாக்குகள் எண்ணும் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. மேலும் »

முல்லைத்தீவில் 2500 புதிய வீடுகள் அமைக்க உலக வங்கி நிதியுதவி

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தரவீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 2500 புதிய வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார். மேலும் »

எழுச்சித்தமிழர் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம்: இயக்குநர் ராம்

எழுச்சித்தமிழர் முத்துக்குமரன் அவர்களது இறுதி நிகழ்வில் நடந்ததை "கற்றது தமிழ்" திரைப்பட இயக்குநர் ராம் அவர்கள் நமது மீனகம்  தளத்தின் ஊடாக வரலாற்றில் இங்கே பதிவு செய்துள்ளார். அவரது பதிவு: முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதமான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும்  காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். மேலும் »

சிறிலங்காவின் பல்கலைக்கழகங்களில் சுமார் 21ஆயிரம் மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்

இம்முறை சிறிலங்காவின் பல்கலைக்கழகங்களில் சுமார் 21ஆயிரம் மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. மேலும் »

இன்று தேர்தல்கள் செயலகத்தில் சந்திப்பு

சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று விசேட சந்திப்பு ஒன்று இடம் பெறுகின்றது. பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். மேலும் »

நாங்கள் இணைந்து செயற்பட விரும்புகின்றோம், ஆனால் தலைமையில் மாற்றம் தேவை – கஜேந்திரகுமார்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) திரிகோணமலையில் நடைபெற்றது. மேலும் »

மாற்றத்திற்காகத் தமிழர் வாக்களிக்கவில்லை – சுரேன் சுரேந்திரன்

சிறீலங்காவில் சிறுபான்மையினர் தன்னாட்சியையே வேண்டுகின்றனர்; ஆனால் அவர்களின் தாயகத்திலுள்ள ஒடுக்குமுறையால் அதனை நடைமுறைப்படுத்த வாக்களிக்கவில்லை. தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தேர்தல் அறிக்கை தனி நாட்டுக்குப் பதிலாகச் சமஷ்டி முறைக் கட்டமைப்பையே விரும்புகின்றது. மேலும் »

நீதித்துறை என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது – மகிந்த

1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்நாட்டு அதிபரான நான் எல்லா சட்டங்களுக்கும் மேலானவன் என்று சிறிலங்க அதிபர் மகிந்த கூறியுள்ளார். மேலும் »

ஐ.நா செயலாளருக்கு ஆலோசனை குழு அமைக்க தகுதி இல்லை – ஜி.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் எண்ணிக்கையான அங்கத்துவத்தை கொண்ட அணிசேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீமூனுக்கு நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு என்ன தகுதி உள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு மின்னஞ்சல் ஊடாக அச்சுறுத்தல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் ஈழநாடு தெரிவித்துள்ளது. மேலும் »

சிங்களக் கிராமமாக மாற்றப்படும் முறிகண்டி?

தமிழீழத்தின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. மேலும் »

தமிழீழ விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் வடக்கில் அழிப்பு

வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து அடையாளங்களையும் இல்லாது செய்யும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக உயர் மட்ட அரசாங்க தரப்பு செய்தி ஒன்று தெரிவிக்கிறது. மேலும் »

செய்தார் வினை செய்தாருக்கே – கண்மணி

17.3.2010 அன்று ஒரு மாலை நாளிதழில் வந்த செய்தி சிலரை பரபரப்பில் ஆழ்த்தியது. அது வெளியே தொங்க விட்டிருந்த விளம்பர சுவரொட்டியில் பொட்டு அம்மான் தற்கொலை என்கின்ற செய்தியை பெரிதுபடுத்தி இருந்தது. வெறும் சுவரொட்டி மட்டும் பார்த்த பல நண்பர்கள் செல்லிடப் பேசியில் அழைத்து, உண்மையா என விசாரிக்கத் தொடங்கினார்கள். அது உண்மை இல்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். மேலும் »

நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய காலத்தின் தேவை: ஈழவேந்தன்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு, காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் தெரிவித்தார். மேலும் »

குளம் வற்றும்வரை காத்திருந்த கூட்டமைப்புக் கொக்குகள்! பாரீஸ் ஈழநாடு.

அந்த வன்னிக் குளம் நிரம்பியிருந்தது. அங்கே, அழகான தமிழ் மீன்கள் துள்ளி விளையாடின. கரையோர மரத்தில் குடியிருந்த கூட்டமைத்துக் குடியிருந்த கொக்குகளுக்கு அந்த மீன்களின் ஆனந்த அழகு பிடிபடவில்லை. என்றாலும், குளத்துடன் கோபிக்கும் தைரியமும், அதனை உடைக்கும் ஆற்றலும் இல்லாமல்  அந்த மீனகளை இரையாக்கும் ஆசையுடன் தவித்தன. ஆனாலும், அந்த மீன்களை அரவணைத்துப் பாதுகாத்தது அந்த வற்றாத குளம். மீன்களும் ஆனந்தமாக நீச்சலடித்தன. அபார நம்பிக்கையுடன் எந்த அச்சமும் இல்லாமல் நீந்தி மகிழ்ந்தன. மேலும் »

பொன்சேகா செய்தவை முட்டாள்தனமானவை என்கிறார் சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சே

முன்னாள் கூட்டுப்படைத் தலைமை அதிகாரி சரத் பொன்சோக ஒரு முட்டாள் என சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். "சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட் டைம்ஸ்"  இதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் சிறிலங்கா அரசதலைவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் »

சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு

சிறிலங்கா அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக