திங்கள், 29 மார்ச், 2010

த.தே.ம.முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம்

த.தே.ம.முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம்

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கையுடன் இலங்கையின் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் »

குடாநாட்டு மக்களை அதிர்சிக்குள்ளாக்கிய மாணவனின் படுகொலைச் சம்பவம்

சாவகச்சேரியில் மாணவன் திருச்செல்வம் கபில்நாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு யாழ்ப்பாண மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. யுத்தத்தினால் பேரிழப்புகளை சந்தித்த மக்கள் தங்கள் இழப்பின் துயரங்களை நினைந்து நினைந்து அழுது எலும்பும் தோலுமாகி இருக்கும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரியில் வைத்து கடத்தப்பட்ட கபில்நாத் என்ற மாணவன் நேற்று முன்தினம் புதைகுழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் »

கருணாநிதியின் செம்மொழிமாநாடு தமிழர்களின் ஒற்றுமையைக்கெடுக்கும்… – அமெரிக்க உலகத்தமிழ் அமைப்பு அறிக்கை

ஈழத்திலே தமிழின அழிப்பு, தமிழகத்திலே எங்கும் தமிழும் இல்லை, தமிழர்களிடத்தில் ஒற்றுமையும் இல்லை. இந்நிலையில் திமுக தலைவர்  கருணாநிதி உலகச்செம்மொழி மாநாடு நடத்தவுள்ளார். இம்மாநாடு தமிழர்களின் ஒற்றுமையை கெடுக்கும் என்று அமெரிக்க உலகத்தமிழ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் »

மாணவனின் கொலையை கண்டித்து கறுப்பு பட்டியணிந்து பாடசாலைக்கு செல்லுமாறு வேண்டுகோள்

யாழ்ப்பாணம்  இந்துக்கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாணவர்கள் கறுப்பு பட்டியணிந்து பாடசாலைக்கு செல்லுமாறு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மேலும் »

மகிந்த யாழ் பயணம்

எதிர்வரும் 8ம் திகதி சிறிலங்காவில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத்தேர்தலின் பிரச்சாரப் பணியில்  பங்கேற்கும் முகமாக சிறிலங்காவின் அதிபர் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மழையினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்

வன்னியல் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிறீலங்கா அரசினால் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு அண்மையில் பெய்த மழையானால் அவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

எல்லை கடந்த சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனப் பதிவுகள்

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்ட தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் திரு ச கிருபாகரன் மீது சிறீலங்கா அரசு ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வைத்து தனது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருந்ததது. மேலும் »

சாவகச்சேரி மாணவன் கபில்நாத் படுகொலையில் சிறிலங்கா அரசின் துணைப்படை ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை

குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பாக  சிறிலங்கா அரசின் துணைப்படையான ஈ.பி.டி.பி.  நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யுமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. மேலும் »

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள்: இந்திய ஊடகம்

தமிழர் தாயகத்தின் வடபகுதியும் சிங்கள மயமாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »

எம் இருப்பை உயிர்ப்பிக்குமா இத்தேர்தல்?

இலங்கையின் 2010 பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் மிகவும் சூடுபிடித்துள்ளன. இவ்வருடம் 196 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக, 336 பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளும் 301 சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த 7620 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் »

தபால் மூலம் வாக்களிப்பு பற்றி 142 முறைப்பாடுகள்: பஃவ்ரல் அமைப்பு

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு மிகவும் மேசடிகள் நிறைந்ததாக முடிவுற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. மேலும் »

வவுனியாவில் ஈ.பி.டி.பி குழுவினரால் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை

வவுனியா சாந்தசோலை பகுதியில் நேற்றிரவு மதுபான விருந்துக்கு அழைத்துசென்ற ஈபிடிபியின் ஆதரவு இளைஞர்கள், அப்பாவி இளைஞர் ஒருவரை அடித்து தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் பலனழிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் »

தமிழ்த் தேசியத்திற்கு உயிரூட்டக்கூடியவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் – கனேடியத் தமிழ் பட்டதாரிகள் அமைப்பு

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த்தேசியக் கொள்கையுடன் தேர்தலில் போட்டியிடும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" மக்கள் வாக்களிக்க வேண்டும் என, கனடிய தமிழ் பட்டதாரிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் »

ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்கு ஏதிலிகளாக வரக்கூடாது: தமிழக கரையோர காவல்படை

ஈழத்தமிழ் மக்கள் கடல்வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வரக்கூடாது என்று தமிழக கரையோர காவல்படையினர் அறிவித்துள்ளார்கள். மேலும் »

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததற்கும் கருணாநிதியின் ஆலோசனைதான் காரணம்: பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத்தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய மூன்றாவது அணி மக்கள் தயார் கட்சிகள் தயாரா? என்ற நூலின் வெளியீட்டுவிழா ஞாயிறு 28-3-10 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. மேலும் »

ஆட்சிமொழி – இரா.ரவி

தமிழறிஞர் பாவாணர் தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டது போல், உலகின் முதன் மொழி நம் தமிழ் மொழி. தமிழராகப் பிறந்ததற்கே உலக மனிதர்கள் யாவரும் பெருமை கொள்ள வேண்டும். என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில். மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி நம் தமிழ்மொழி. மேலும் »

ஐ.நா. சபை வளாகத்தில் சிங்களப் பேரினவாதம் விடுத்த மிரட்டலுக்கு எதிராக தமிழினம் பொங்கி எழவேண்டும் !

ஐ.நா. வளாகத்திலேயே அண்மையில் தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் சிங்கள பேரினவாத அரசின் கைக் கூலிகளால் அச்சுறுத்தலுக்கும் அவமானகரமான சூழலுக்கும் உள்ளாக்கப் பட்ட சேதி தமிழ் இனத்துக்கே உலக அரங்கில் விடுக்கப்பட்ட மிரட்டலாகும். தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் திரு. ச. கிருபாகரன் தமிழ் மக்களின் மனித உரிமைக் குரலாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஐ.நா.வில் திகழ்ந்து வருபவர். மேலும் »

தற்கொடையின் அரசியல் – தோழர் தியாகு

கடந்த 1987ஆம் ஆண்டு செயவர்த்தனாவின் ஆணைப்படி சிங்களப் படை, யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. புலிப்படை அவர்களை எதிர்த்துக் கடுஞ்சமர் புரிந்த போதிலும் சிங்களப் படையின் முன்னேற்றத்தைத் தடுக்க இயலவில்லை. புலிப்படை இப்போதுபோல், அப்போது நேருக்கு நேர் போர் புரியும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. அது இன்னமும் கெரில்லா படையாகவே இருந்து வந்தது. மேலும் »

சீனாவை உன் பக்கத்தில் வைத்திருக்கிறாய்.. அவனுக்கு விழுமடி உனையும் அழிக்கும் – கவிப்பித்தன்

தமிழர்கள்
சுனாமியில் அங்குமிங்குமாக
அல்லோலக் கல்லோப்பட்ட
நேரம் பார்த்து.. குரங்குப்பாச்சலில்
தமிழருடையதையும்
வறுகிச் சேர்த்தவனே.. மேலும் »

சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான அனுமதிகளை இந்தியாவுக்கு வழங்குவதில் சிறீலங்கா பின்னடிப்பு

இந்தியாவின் ஆதரவுடன் சம்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த அனல் மின்நிலையத்திற்கான அனுமதிகளை வழங்குவதற்கு சிறிலங்கா நீதியாணையாளர் அலுவலகம் பின்னடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக