தமிழர் தேசிய இயக்கத்தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய மூன்றாவது அணி மக்கள் தயார் கட்சிகள் தயாரா? என்ற நூலின் வெளியீட்டுவிழா ஞாயிறு 28-3-10 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. மேலும் »
ஆட்சிமொழி – இரா.ரவி
தமிழறிஞர் பாவாணர் தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டது போல், உலகின் முதன் மொழி நம் தமிழ் மொழி. தமிழராகப் பிறந்ததற்கே உலக மனிதர்கள் யாவரும் பெருமை கொள்ள வேண்டும். என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில். மற்ற மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி நம் தமிழ்மொழி. மேலும் »
ஐ.நா. சபை வளாகத்தில் சிங்களப் பேரினவாதம் விடுத்த மிரட்டலுக்கு எதிராக தமிழினம் பொங்கி எழவேண்டும் !
ஐ.நா. வளாகத்திலேயே அண்மையில் தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் சிங்கள பேரினவாத அரசின் கைக் கூலிகளால் அச்சுறுத்தலுக்கும் அவமானகரமான சூழலுக்கும் உள்ளாக்கப் பட்ட சேதி தமிழ் இனத்துக்கே உலக அரங்கில் விடுக்கப்பட்ட மிரட்டலாகும். தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் திரு. ச. கிருபாகரன் தமிழ் மக்களின் மனித உரிமைக் குரலாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஐ.நா.வில் திகழ்ந்து வருபவர். மேலும் »
தற்கொடையின் அரசியல் – தோழர் தியாகு
கடந்த 1987ஆம் ஆண்டு செயவர்த்தனாவின் ஆணைப்படி சிங்களப் படை, யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. புலிப்படை அவர்களை எதிர்த்துக் கடுஞ்சமர் புரிந்த போதிலும் சிங்களப் படையின் முன்னேற்றத்தைத் தடுக்க இயலவில்லை. புலிப்படை இப்போதுபோல், அப்போது நேருக்கு நேர் போர் புரியும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை. அது இன்னமும் கெரில்லா படையாகவே இருந்து வந்தது. மேலும் »
சீனாவை உன் பக்கத்தில் வைத்திருக்கிறாய்.. அவனுக்கு விழுமடி உனையும் அழிக்கும் – கவிப்பித்தன்
தமிழர்கள்
சுனாமியில் அங்குமிங்குமாக
அல்லோலக் கல்லோப்பட்ட
நேரம் பார்த்து.. குரங்குப்பாச்சலில்
தமிழருடையதையும்
வறுகிச் சேர்த்தவனே.. மேலும் »
சம்பூர் அனல் மின்நிலையத்திற்கான அனுமதிகளை இந்தியாவுக்கு வழங்குவதில் சிறீலங்கா பின்னடிப்பு
இந்தியாவின் ஆதரவுடன் சம்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த அனல் மின்நிலையத்திற்கான அனுமதிகளை வழங்குவதற்கு சிறிலங்கா நீதியாணையாளர் அலுவலகம் பின்னடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
மட்டக்களப்பில் பொதுமக்கள் மீது பிள்ளையான்குழு தாக்குதல்
இன்று பிற்பகல் மட்டக்களப்பு கொக்குவில் ஆலமரத்தடியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் இடம்பெற இருந்தது. அங்கே குழுமியிருந்த மக்களை ஆயுததாரி பிள்ளையான் குழுவினர் தாக்கியுள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் »
எதிர்வரும் வாரத்தில் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி லியன் பெஸ்கோ சிறீலங்கா வருகை
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி லியன் பெஸ்கோ எதிர்வரும் வாரத்தில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் »
அடிப்படை உரிமைகளுக்காக சிங்கள அரசுடன் மட்டுமன்றி கூட்டமைப்புடனும் போராட வேண்டியிருக்கிறது!
இன்று கூட்டமைப்பு உடைந்து போனமை கவலைக்குரிய ஒரு விசயமே. நாங்கள் கடைசி வரையும் ஒற்றுமைக்காகவே பாடுபட்டோம். இப்போதும் அதையே வலியுறுத்துகிறோம். மேலும் »
கருணாநிதியின் வரலாற்று பிழை – இளமாறன்
இந்திய தேசிய அரசியலில் நமது தமிழ் தேசியம் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்று பதிவு செய்து வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் ஊடக தர்மங்களில் ஒன்றாகும். நாம் நமது அடையாளத்தை நமது எதிர்காலத்திற்கு சொல்லி வைப்பதென்பது, நாம் வாழ்ந்ததை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். நமக்கான வரலாறு என்பது எவ்வாறெல்லாம் சிதைவு ஏற்பட்டு, இன்று நமது கையறுநிலை, கையேந்தி நிற்க வைத்திருக்கிறது. மேலும் »
நிறைவேற்று அதிகாரமுள்ள ஐனாதிபதி முறைமை கைவிடப்படும்?
ஏப்ரல் 8 ம் திகதி தேர்தல் நிறைவடைந்த பிற்பாடு தாம் மீளவும் அரசு அமைக்கும்போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஐனாதிபதி முறைமையை கைவிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் »
பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிப்பதனை பல நாடுகள் நிராகரித்துள்ளன: லக்பிம
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிப்பதனை பல நாடுகள் நிராகரித்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக பல ஆசிய நாடுகள் இந்த கோரிக்கையை நிராகரிக்கத் தீர்மானித்துள்தளாக சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் »
106.8 மில்லியன் டொலர் நிதிஉதவி: ஈரான் அபிவிருத்திவங்கி
சிறீலங்காவில் உள்ள 1000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஈரான் அபிவிருத்தி வங்கி சுமார் 106.8 மில்லியன் டொலர் கடன்தொகையாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் »
மக்களை தம்பக்கம் இழுக்க சிறிலங்கா இராணுவத்தால் 680 வீடுகள்
யாழ்.குடா நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் அடையாளம் காணப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து வீடுகளை கட்டிக்கொடுக்கும் விசேட திட்டம் ஒன்றை சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். இராணுவ தலைமையகம் மேற்கொண்டுள்ளது. மேலும் »
இன்றும் நாளையும் வாக்காளர் அட்டை விநியோகப்பணியின் விசேட தினங்கள்
சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக இருப்பதனால் இவ்விருதினங்களையும் வாக்காளர் அட்டை விநியோகப்பணிகளின் விசேட தினங்களாக தபால் திணைக்களம் பிரகடனப்படுத்தி அதற்கு ஏற்றவகையில் தமது பணிகளை முடுக்கிவிட்டுள்ள்னர். மேலும் »
ஈழத்து ஏதிலிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் – பா.ஜ.கட்சி
தமிழகத்திலுள்ள ஈழத்து ஏதிலிகளின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்யவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன் இராதகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மேலும் »
நாங்கள் என்றும் கொள்கையில் உறுதியாக இருப்போம் – காந்தரூபன்
தமிழ் மக்களின் விடுதலை வேணவாவை ஓங்கி ஒலிக்கும் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் விலக மாட்டோம் எனவும், அதில் என்றும் உறுதியாக இருப்போம் எனவும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருக்கோணமலை வேட்பாளர் தங்கவேலாயுதம் காந்தரூபன் தெரிவித்துள்ளார். மேலும் »
தமிழீழ விடுதலைப் போராட்டம் நீதியற்று அழிக்கப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு பயங்கரவாதம் என்பதன் இந்திய அர்த்தம் புரியப்போவதில்லை!
'பாவத்தின் சம்பளம் மரணம்' என்கிறது கிறிஸ்தவம். 'இந்திய பாவத்தின் சம்பளம் பயங்கரவாதம்' என்று எச்சரிக்கிறது அமெரிக்கா. பாகிஸ்தான் ஆதரவில் செயற்படும் 'லக்சர் ஈ தொய்பா' ஆயுத குழு இலங்கையிலும் பரவியுள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதி ரொபேட் விலாட் தெரிவித்துள்ளார். மேலும் »
வாக்காளர்களை வசீகரிப்பதற்கான வேட்பாளர்களின் இலட்சார்ச்சனை
தேர்தல் நெருங்குகின்றது. வாக்காளப் பெரு மக்களைத்தம்பக்கம் இழுப்பதற்கான பல்வகை யுத்திகளை வேட்பாளர்கள் கையாள்கின்றனர். இதில் யாருடைய கருத்துக்களை வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை எதிர் வரும் 8ந் திகதிக்குப் பின்னரே சொல்ல முடியும். மேலும் »
உடைந்த சாவிகளும் பொருத்தமில்லாப் பூட்டுகளும் – இதயச்சந்திரன்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வின் திறவு கோல்கள் எங்கே இருக்கின்றன?சாவிகளைப் பல பேர் வைத்துள்ளனர். அதில் தம்மால் மட்டுமே முடியும் என்கின்றவாறு உடைந்த சாவிகளையும் சிலர் காண்பிக்கின்றனர். மேலும் »
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக