கபே அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக் கூடிய அனைத்து வழிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஃபொரொக்ஷி இணையத்தள வழியாகவும் அதனைப் பார்வையிட முடியாதுள்ளதாகவும் கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மனிதனில் எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோ?அவன் மனிதனல்ல, விலங்கு என்பதை உணர வேண்டும். திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்."கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது" என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரலாற்று நிகழ்வுகள் ஒரு தனிமனிதனைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த தனி மனிதன் சமூக அமைப்பில் ஆற்றும் பங்களிப்பே வரலாறாக பதிவு செய்யப்படுகிறது. உலகத்தில் வரலாற்றில் வாசிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வும் இப்படி ஒரு தனிமனிதனின் ஏற்ற இறக்கங்கள், அந்த சமூகத்தோடு எப்படி இயங்கியது? இதன் மூலம் இச்சமூகம் பெற்ற வெற்றி, இச்சமூகத்திற்கு கிடைத்த மகிழ்ச்சி அல்லது அந்த ஒரு தனிமனிதனால் இச்சமூக கட்டமைப்பு அடைந்த வீழ்ச்சி, துயர் இவைகளே நம்மை வரலாற்றை உற்றுப் பார்க்க வைக்கிறது.
கடந்த ஆண்டு போர் முடிந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறிய வாக்குறுதிகளை மட்டும் ஏற்றுக்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பியிருந்தது தெரிந்ததே. இப்போது அந்த வாக்குறுதிகள் கொடுத்து ஒரு ஆண்டு ஆகும் நிலையில், தமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முன்னேற்றம் ஏதுமில்லை என பான் கி மூன் விசனம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் அவசர காலச்சட்டத்தை நீடிப்பதற்கான காரணம் என்னவென ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மீண்டும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் ஹந்துன்நெத்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு நிலைமைகள் குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அனுப்பி வைப்பதற்காக குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலொன்றை அடுத்து, இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்த்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்திகள்
- ஐ.நா செயலாளர் பான்கீமூனும் விதிகளை மீறி விட்டார்: சிறீலங்கா
- முத்துவல் இராணுவ முகாம் அருகே சடலங்கள் மீட்பு
- "எனது மகள் பயங்கரவாதி" அயர்லாந்து – டப்ளினில் திரையிடப்பட்டது
- பேராதனையில் இந்திய மத்திய நிலையம் திறப்பு
- குருதியில் முளைத்த மகளிர் தினம் – கண்மணி
- பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடுவோம்
- சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இதுவே தருணம் – பேராசிரியர் பொய்லி
- பாலைத்தீவிலும் சீனர்களின் நடமாட்டம்
- தாயக அரசியல் குளறுபடிகள் – தமிழ் தேசிய மக்கள் முன்னனி அறிக்கை
- கருணாவால் உடைக்கப்பட்ட விகாரையை கருணாவை வைத்து திறந்த மகிந்த
- யாழ். போதனா வைத்திசாலையில் முன்னறிவிப்பு இன்றி மின்வெட்டு
- எதிர்வரும் வார இறுதியில் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பம் – ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக