திங்கள், 1 மார்ச், 2010

வினாத்தாள்கள் மாயம் – பரீட்சைகள் இரத்து

எதிர்வரும் 03ம் திகதிக்கு முன்னதாக நாடு முழுவதிலுமுள்ள தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Google Buzz
1 March 2010

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராயுமாறு உயர் நீதிமன்றம் சிறிலங்காவின் சட்டமா அதிபருக்கு இன்று அறிவித்துள்ளது.

Google Buzz
1 March 2010

இன்று நடைபெறவிருந்த ஊவா கல்வியல் கல்லூரிகளின் இறுதி தவணைப்பரீட்சைக்கான ஒரு தொகுதி வினாத்தாள்கள் காணமல் போயுள்ளன. இதனால் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகளும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Google Buzz
1 March 2010

யுத்தம் காரணமாக வடபகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தும் பணியில் மேலும் ஒரு கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன், பள்சைப்பள்ளி ஆகிய பகுதிகளிலும் முல்லைத்திவு மாவட்டத்தில் நெடுங்கேணிப்பகுதியிலும் இந்த பணிகள் இடம்பெற்றுவருவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Google Buzz
1 March 2010

எதிர்வரும் ஏப்றல் 8ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களது இலக்கங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Google Buzz
1 March 2010

சிறிலங்காவில் தொடரூந்து சங்கத்தின் 6 பிரதான தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளதாக தொடரூந்து தொழிலாளர் சங்கத்தின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

Google Buzz
1 March 2010

தேர்தல் தினத்தை அண்மித்து மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றங்கள் இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புக்களை பதிக்கலாம் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Google Buzz
1 March 2010

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பல நாட்டு உதவியுடன் அழித்து, கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பராமரிக்க தம்மிடம் இருக்கும் நிதி போதாது என சிறீலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதானத்த றணசிங்க தெரிவித்துள்ளார்.

Google Buzz
1 March 2010

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிட முயற்சிப்பதனை கண்டித்து ஆர்ப்பட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.

Google Buzz
1 March 2010

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அவசியமெனில் அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடம் அதுசம்பந்தமாக விண்ணப்பிக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Buzz
1 March 2010

சிறீலங்கா என்ற தேசத்தின் "சனநாயகம்' மீது ஏற்கனவே நம்பிக்கையிழந்திருந்த தமிழர்கள் மட்டுமல்ல பெரும்பாலான உலக சனநாயக அரசுகள், மனித உரிமை அமைப்புக்கள் உட்பட சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருமே அதிருப்தியுற்றிருக்கிற தருணம் இது.

Google Buzz
28 February 2010

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு – கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

Google Buzz
28 February 2010

சிறிலங்காவில் டெங்கு காய்ச்சல் பொதுமக்களின் ஒரு சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக சிறிலங்காவின் சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது. இதுவரை காலமும் நகரப் புற மக்களே இந்நோயின் தாக்கங்களுக்கு உள்ளாகி வந்தார்கள். தற்போது இதன் தாக்கம் கிராமப் புறங்களிலும் காணப்படுகின்றது.

Google Buzz
28 February 2010

கண்டி கடுகன்னாவை பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சிறுவன் ஒருவன் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.

Google Buzz
28 February 2010

சிறிலங்கா  பெண்களை சுற்றுலா விசாக்கள் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் தொடர்பாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

Google Buzz
28 February 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு பெப்ரவரிமாதம் 19, 20 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் சந்திப்பினைமேற்கொண்டது. எமக்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருந்த சிந்தனைககைளையும் பிரதிபலிக்கும் வகையில் மீளமைக்கப்பட்ட மதியுரைக்குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 8 ம் திகதி வெளியிடப்படும்.

Google Buzz
28 February 2010

பெல்ஜியத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொன்சேகாவின் பிரதான செயலாளரும், அரச தலைவர் தேர்தல் பிரச்சார முகாமையாளருமான சேனக கரிப்பிரியா டி சில்வாவை நாடுகடத்துமாறு பெல்ஜியம் சிறீலங்கா அரசை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Google Buzz
28 February 2010

சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பில் அதிக முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாடு ஒன்றில் பணியாற்றிவரும் சிறீலங்கா இராணுவ மேசர் செனரல் ஒருவர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா தெரிவித்துள்ளது.

Google Buzz
28 February 2010

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்களை வெளியிடுவதற்கான சட்டம் இதனைவிட திருத்தங்களுடனும் விரிவாகவும் அமையவேண்டுமென தேசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Google Buzz
28 February 2010

இலங்கை இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் கண்டு இலங்கை அரசு அச்சம் அடைந்துள்ளது.

Google Buzz
28 February 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக