திங்கள், 8 பிப்ரவரி, 2010

சரத்பொன்சேகா சிறிலங்கா இராணுவத்தால் கைது

முன்னால் இராணுவத்தளபதியும் சிறிலங்கா அரசத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவரது செய்தித்தொடர்பு உதவியாளர் சேனகா டி சில்வாவும் சற்று நேரத்துக்கு முன்னர் இராணுவ காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
8 February 2010
திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இருவெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.
8 February 2010
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சியுடனோ கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
8 February 2010
உலக செம்மொழி மாநாடு நாள் குறைப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் 137 நாட்களில் செம்மொழி மாநாடு கோவையிலே கழக குடிகளின் ஆராவாரத்தோடு அரங்கேற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக மிக வேகமாக ஒளியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடிய பலர் இம்மாநாட்டிலே பங்கேற்று தமது ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.
8 February 2010
புதிய ஏழாவது பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியால் தெரிவு செய்யப்படும் சனநாயக மக்கள் முன்னணியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் திரும்பி வருவேன் என சனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
8 February 2010
சுடரொளி, உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு.வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் கடந்த வாரம் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளமை மிகுந்த வேதனைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும், புத்திமான்களும், ஊடகவியலாளர்களும் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
8 February 2010
சிறீலங்காவும் – சீனாவும் மிக நெருங்கிய நண்பர்கள். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த நட்புறவு உச்சத்தை தொடும் என சீனா அரச தலைவர் கூஜின்ரவோ தெரிவித்துள்ளார்.
8 February 2010
வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களை சேர்ந்த ஆசிரியர்களை அரசியல் காரணங்களை முன்வைத்து அரசு இடமாற்றம் செய்து வருவதாகவும், அதற்கு ஆசிரியர் இடமாற்ற சபையின் அனுமதிகளை கூட அரசு பெறவில்லை என ஆசிரியர் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
8 February 2010
தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசியதற்காக மலையாள நடிகர் ஜெயராம் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 February 2010
பல்வேறு இனங்கள், மதங்கள் கொண்ட ஓர் சமூகக் கட்டமைப்பில் தீர்ப்புக்களை வழங்குவது சிரமமானதென்றாக இருக்கின்ற போதிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நியாயமான தீர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டுமென என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
8 February 2010
இலங்கைத் தீவில் மீண்டும் ஒரு திருக்கூத்து அரங்கேறப்போகின்றது. ஜனநாயகம், தேர்தல், வாக்களிப்பு என்ற பல பெயர்களில் அமைந்த திருவிழாதான் அது.
8 February 2010
யாழ் பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
8 February 2010
வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்து திரும்பியுள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம், அப்பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்லமுடியும் எனவும் கூறியுள்ளார்.
8 February 2010
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிரித்தானியாவில் துஸ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.
8 February 2010
அரச அதிபர் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் ஏன் மகிந்தவை ஆதரிக்கவில்லை என்பதை சிறிலங்கா அரசாங்கம் மீளாய்வு செய்து அதற்கான பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டுமென திருகோணமலை மாவட்ட பா.உ. துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
8 February 2010
சுற்றுலா விசா அனுமதி மூலமாக சிறிலங்காவிற்கு வரும் வெளிநாட்டவர்கள் வர்த்தக மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதனை தடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
8 February 2010
சிறிலங்கா நாடாளுமன்றம் இவ்வாரம் கலைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் அது நாளை கலைக்கப்படலாம் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 February 2010
முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணன் அவர்களின் கட்டுரைக்கு வன்னி அரசு அவர்களின் மறுப்புக்கட்டுரை.
8 February 2010
இனம் தெரியாத புது வகைக் காய்ச்சலால் சிறிலங்காவில் இருவர் கடந்த சில நாட்களில் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
7 February 2010
சிறீலங்கா அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் வன்னியில் குடியேறி வரும் மக்களை வரவேண்டாம் என்று, அங்கு குடியமர்ந்து சிங்களபடையினரின் கொடுமைகளை அனுபவிக்கும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
7 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக