வியாழன், 11 பிப்ரவரி, 2010

செய்தி இணையத் தளங்களை சிறீலங்காவில் தடை செய்வதற்கு நடவடிக்கை

வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு செய்தி இணையத் தளங்களை சிறீலங்காவில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11 February 2010
முன்னாள் இராணுவத் தளபதி கைதின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியா ஆகியவற்றின் கரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 February 2010
சிறீலங்கா அரசாங்கம் வன்னியில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர் வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 February 2010
எதிர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள் காடுகளில் ஒளிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
11 February 2010
தனது கணவரான முன்னாள் இராணுவ தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான செனரல் சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணான வகையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி அனோமா பொன்சேகா உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை நேற்று தாக்கல் செய்தார்.
11 February 2010
சிறிலங்காவில் இருந்து சிங்கள வியாபாரிகள் தினமும் மரக்கறிவகைகளை பெருமளவில் யாழ்ப்பாணம் எடுத்துச்செல்வதால் உள்ளுர் உற்பத்தி மரக்கறி வகைகளைச் சந்தைப்படுத்த முடியாமல் யாழ்.குடாநாட்டு விவசாயிகள் பெரிதும் திண்டாடுகின்றனர்.
11 February 2010
தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய 19 தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.
11 February 2010
மிருசுவில் கெற்பேலி என்ற இடத்தில் நிலத்தில் புதைந்திருந்த மர்மப் பொருளை எடுத்து உடைத்தபோது அது வெடித்ததில் சிறுவன் காயமடைந்துள்ளான். சபாபதி சாரங்கன் என்ற 12 வயது சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளான்.
11 February 2010
நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் அரசுக்கு ஒரு சவாலாக அமையாது என முன்னாள் மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.
11 February 2010
கிழக்கு மாகாணத்தின் முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கட்சியின் தலைவருமாக சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட ஆயுததாரி பிள்ளையான் இன்று சிறிலங்காவின் அரச தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.
11 February 2010
உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். இன்று நேற்றல்ல பல நூறாண்டு களாக தமிழர்கள் பல நாடுகளில் குடியேறி அந்நாடுகளையே தங்கள் சொந்த நாடுகளாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள்.
11 February 2010
சீனாவில் உருவாகிய மக்கள் சனநாயக சர்வாதிகாரம் தற்போது புதிதாக கொழும்பில் உருவாகி வருகின்றது. உலக விவகாரங்களில் சீனா கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்துள்ளது.
11 February 2010
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டமையும், அவர் கைது செய்யப்பட்டிருக்கின்ற முறைமையும் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
10 February 2010
முறுகண்டியில் இதுவரைகாலமும் இயங்கி வந்த ஒட்டிசுட்டான், பிரதேச செயலகம் பழைய இடத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
10 February 2010
தடுப்புக்காவலில் இருந்தவாறே புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தனது மனைவியை தலைவியாக நியமித்து எதிர்வரும் பொதுதேர்தலில் களமிறக்குவதற்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா திட்டமிட்டுள்ளார் என்று பொன்சேகாவின் மனைவி அனோமாவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 February 2010
சிறீலங்காவின் அதிபர் தேர்தல் பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் தொடர்ந்தும் சர்ச்சைகள் நிலவி வரும் வேளையில் முடிவுகள் வெளியிடப்பயன்படுத்தப்பட்ட காபன் பிரதிகளை சமர்ப்பிக்கும் படி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளது.
10 February 2010
கடந்த ஆண்டு மார்கழி மாதம் லாபு தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 8 அறைகளும் இதர பொருட்களும் முற்றாக சாம்பலாயின. இதனால் கடந்த மாதம் பள்ளி தொடங்கியதும் மாணவர்கள் இடப்பற்றாக்குறையினால் படிப்பதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.
10 February 2010
1924 ஆம் ஆண்டில் அப்போதைய பிரித்தானியா அரசாங்கதால் தமிழர்களுக்காக வழங்கப்பட்ட 3.381 ஏக்கர் பரப்பளவிலான இடுகாட்டு நிலத்தை மீண்டும் மீட்டுத் தந்த மாநில மக்கள் கூட்டணி அரசுக்கும் மாநில மந்திரி பெசார் டான்சிறி காலிட் இப்ராகிமுக்கும் மனமார்ந்த நன்றியை காப்பார் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசு சார்பற்ற இயக்கங்களும் தெரிவித்துக்கொண்டன.
10 February 2010
இங்கு ஸ்தாப்பாக், ஆயர் கொரோ ரூமா பாஞ்சாங்கில் கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் அமுலாக்க அதிகாரிகளால் நேற்று முன் தினம் உடைக்கப்பட்டது. காளியம்மன் கோயில் அல்ல. மாறாக, அது ஆலயத்தின் பின்னால் இழுத்துக் கட்டப்பட்ட கூடாரமே என்று செத்தியா வங்சா ம.இ.கா. தொகுதித் தலைவர் எஸ்.ராஜா தெரிவித்தார்.
10 February 2010
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாக அரசாங்கம் இன்று புதன்கிழமை அறிவித்தது.
10 February 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக