வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் மீள்உறுதிப்படுத்தும் கருத்துக்கணிப்பு தேர்தல் எதிர்வரும் 28ம் திகதியில் டென்மார்க்கிலும், அதனைத்தொடர்ந்து இத்தாலி நாட்டில் நடைபெறவிருக்கும் மாபெரும் இலட்சிய தமிழரின் பெருவிருப்பம், வெற்றியளிக்க பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தமது இதயபூர்வமான வாழ்த்துதல்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றது.
அனைத்து அரச அலுவலகங்களுக்குள்ளும் அதன் வளாகங்களுக்குள்ளும் தேர்தல் பதாதைகளை காட்சிப்படுத்துவது மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இரண்டு சுற்று நிருபங்களை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
சமீப காலங்களில் தமிழ் தேசியத்திற்கு எதிரான எதிரிகள் மூலைக்கு மூலை முளைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தமிழ் தேசியத்தின் அடையாளத்தை முடக்கிப்போட வேண்டும், அதற்கான முயற்சிகள் எதையும் செய்வதற்கு அவர்கள் தயார். களத்திற்கு வரமாட்டார்கள், தெருவுக்கு வரமாட்டார்கள், ஆனால் அறைக்குள் இருந்து வரையத் தொடங்கிவிடுவார்கள்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளரும் ஈழத்தின் கவிஞர்களில் ஒருவருமான தீபச்செல்வன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியலில் தீபச்செல்வன் பெயர் இடம்பெறவில்லை.
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு கமாண்டோ படையணி முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மூவரை அடையாளம் காண்பதற்காக அந்த முகாமிலுள்ள 48 படையினரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- தேர்தல்கள் காலத்தில் அரச ஊழியர்களுக்கு பணி உயர்வு மற்றும் இடமாற்றம் போன்றவற்றை வழங்கவேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்
- சிங்கள நீதியை நம்பி ஏமாந்து போய்விட்டார் சரத் பொன்சேகா! பாரீஸ் ஈழநாடு.
- கஜேந்திரனும் அவரின் நண்பர்களும் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
- மீள்குடியேற்றத்திற்கு காலக்கெடு இல்லை – சிறிலங்கா
- சிறுமி கற்பழிப்பு சித்தாண்டியில் பதற்றம்
- வடக்கு கிழக்கில் ரியுனாவிற்கு முக்கிய நாடுகள் போட்டி
- பொன்சேகா மீதான சட்டநடவடிக்கை குறித்து அமெரிக்க கவலை – ரொபேட் ஓ பிளேக்
- யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்ற பேரூந்து விபத்து! 12 பேர் படுகாயம்
- சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது
- பண்டாரவளையில் மாணவியிடம் முறைகேடாக நடந்த அதிபர் கைது
- தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வவுனியாவில் வேட்பு மனுத்தாக்கல்
- மக்கள் சிந்தித்து வாக்களிக்கட்டும் எவரும் வழிகாட்ட வேண்டாம் – வலம்புரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக