செவ்வாய், 5 ஜனவரி, 2010

தேசியத் தலைவரின் படங்கள் அடங்கிய பதாகைகள் தமிழ்நாடு அரசால் அகற்றம்

சிறிலங்காவின் உற்பத்தி பொருட்களை புறக்கணிக்கும் அமைப்பு ஒன்று வெளிநாட்டு மக்களை கவரும் விதத்தில் காணொலி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
5 January 2010
கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 130 பேர் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5 January 2010
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெறும் சில தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில் அவருக்கான காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொன்சேகா தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
5 January 2010
கொழும்பு சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் இரு தமிழ் கைதிகள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
5 January 2010
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படங்களுடனான ஏராளமான டிஜிட்டல் பதாதைகளை சென்னை நகரில் இருந்து அகற்ற தமிழ் நாடு கியூ பிரிவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
5 January 2010
யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதை திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வவுனியா மிக முக்கிய பிரதேசமாக மாறியுள்ளது. அதாவது தென்னிலங்கையையும் தமிழர் தாயகத்தையும் இணைக்கும் பகுதியாக இது இருந்து வருகின்றது.
5 January 2010
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காப் படையினர் இருவர் தற்கொலைசெய்து உயிரிழந்துள்ளனர். வசாவிளான் இராணுவ மருத்துவமனையில் கடமையாற்றிய கோப்ரல் தரத்தைச் சேர்ந்த படையினர் ஒருவர் தனக்கு நஞ்சு மருந்தை ஏற்றி தற்கொலை செய்துகொண்டார்.
5 January 2010
இந்தோனேசியாவில்   Bintan in the Sumatran Kepulauan Riau province எனும் இடத்தில்  11 ஈழத் தமிழர்களை தாம் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
5 January 2010
கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில்  நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன.
5 January 2010
தமிழில் தற்போதுள்ள நூல்களில் தலைமுதல் நூலான தொல்காப்பியத்தின் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பட்டதாக ஆய்வுகள் கணக்கிடுகின்றன. மூவாயிரம் வருடங்களுக்கு இத்தாலியில் வெடித்துச் சிதறிய தீக்குழம்பினல் கருகிப்போய், தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள பொம்பே நகரின் நாகரிக அமைப்பைக்கண்டு இன்றைய உலகமே வியந்து நிற்கிறது.
5 January 2010
சிறிலங்கா அரசத்தலைவர் மகிந்த ராஜபக்சேவைப் போற்றும் வகையில் இயற்றப்பட்ட வணக்கம் மாமன்னரே ! என்ற சிங்களப் பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி கமகேவுக்கு மகிந்த ராஜபக்சேவின் பாரியாரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
5 January 2010
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மூலம் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ் மக்களுக்குக கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி கொடுங்கோலன் ராஜபக்சவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவ்வாறு தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4 January 2010
அன்பார்ந்த யேர்மன்வாழ் தமிழீழ மக்களே! தமிழீழ தாயகத்தைக் களமாகவும், தளமாகவும் கொண்டு கடந்த ஆறு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிமுறை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான பெரும் கடப்பாட்டை இன்று நாம் அனைவரும் சுமந்துநிற்கின்றோம்.
4 January 2010
யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் போர் காரணமாக மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில 1994ம் ஆண்டு சூரியக்கதிர் படை நடவடிக்கையினை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் வலிகாமம் பகுதியினை வல்வளைத்திரந்தனர்.
4 January 2010
நேரடி விவாதமொன்றில் கலந்து கொள்ளும் அளவிற்கு அரச அதிபர் மகிந்தவுக்கு போதியளவு கால அவகாசமில்லை என்று சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. தேர்தல் விவகாரங்கள் தொடர்பில் நேரடி விவாதமொன்றில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா விடுத்த கோரிக்கைக்கு சிறிலங்கா அரசு பதிலளித்துள்ளது.
4 January 2010
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமையும் நாளை மறுதினம் புதன்கிழமையும் 1,200 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதுவரை 12 ஆயிரம் பேர் முல்லைத் தீவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
4 January 2010
தமக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் ஊழல் மோசடி குற்றச் சாட்டுக்களை உடனடியாக மக்கள் முன் அம்பலப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
4 January 2010
தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா என்னும் போர்வையில் வரும் சிங்களவர்கள் யாழில் பெரும் சேட்டைகளிலும் அத்து மீறல்களிலும் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
4 January 2010
அண்மையில் சிறிலங்கா அரசு வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்த வெள்ளை அரிசி மக்களின் பாவனைக்கு உகந்ததல்லவென பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என சிறிலங்கா அரசு மறுத்துள்ளது.
4 January 2010
வன்னிப்பகுதியில் கடந்த கால யுத்தம் காரணமாக மூடப்ட்டிருந்த 84 பாடசாலைகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
4 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக