வெள்ளி, 1 ஜனவரி, 2010

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கைவிடப்பட்ட குழந்தை

புத்தாண்டு கொண்டாட்டங்களிடையே 8 மாத குழந்தையொன்று வீதியில் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நுவரெலியாவில் நடந்துள்ளது.
1 January 2010
பம்பலப்பிட்டி கடற்கரைப்பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.   சந்தேக நபரான திமுத்துசமன் என்ற காவல்துறை அதிகாரி இன்று அதிகாலை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
1 January 2010
எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1 January 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் அமைச்சர்களாக மாற வேண்டும் என மகிந்த ராசபக்ச கூறியுள்ளார்.
1 January 2010
ஏய்.. பயங்கர வாத சமூகமே
என் மீது காரி உமிழ்வாய்
என் கருவருப்பாய்
என்னினம் பங்கமுற்று  அழிய கொல்லி ஈட்டுவாய்
நான் எள்ளி நகைக்கவா?????
31 December 2009
இலங்கை மக்களுக்கு மாறுப்பட்ட வித்தியாசமான அரசாட்சி ஒன்றை வழங்குவதே தமது ஒரே நோக்கம் என எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
31 December 2009
மகிந்த ராசபக்ச, தமது தேர்தல் முனைப்புகளுக்காக, அரச சொத்துக்களையும் பொதுமக்கள் நிதிகளையும் பயன்படுத்துவதாக ஊழல்களுக்கு எதிரான ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
31 December 2009
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கோரிய 150 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளாராம் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
31 December 2009
வட மாகாணத்திலுள்ள 1,011 பாடசாலைகளையும் எதிர்வரும் தை மாதத்திலிருந்து முழுமையாக இயக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
31 December 2009
ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் லக்ஸ்மன் கீலுகல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
31 December 2009
ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளுக்குமிடையே உள்ள அரசியல் அபிலாஷைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
31 December 2009
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழ வேண்டும். இவ்வாறு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
31 December 2009
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
31 December 2009
எம் உயிரிலும் மேலான தமிழீழ மக்களே! பிறக்கப்போகும் புதிய ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியையும், புதிய உத்வேகத்தையும், திடசங்கற்பம் பூணும் ஆண்டுகளாகவும் அமையப்போகின்றது.
31 December 2009
தாய்லாந்தின் முன்னாள் பிரதம மந்திரி தக்சின் சின்வாத்ராவை, சிறிலங்காவின் பொருளாதார ஆலோசகராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக பாங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது.
31 December 2009
தென்னாசிய நாடுகளில் சிறிலங்காப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது.
31 December 2009
கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 December 2009
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தமை போன்று ஊர்காவல் படை வீரர்கள் நிதியத்திலிருந்து அதிபர் தேர்தலுக்காக எவ்வித நிதியும் செலவு செய்யப்படவில்லையென ஊர்காவல் படை பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
31 December 2009
கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.
30 December 2009
கொழும்பின் புறநகர் சிலாபத்தின் சுதுவெல தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ச இன்று கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 December 2009


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக