எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அம்பலப்படுத்துதுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள விகாரமாதேவி பூங்காவில் இன்று பிற்பகல் 02.30 அளவில்ஆரம்பிக்கப்பட்டது.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன். தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது.
"கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்" என்று நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மகிந்த ராசபக்ச கேட்டுக் கொண்டார்.மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுமார் 12 நிமிடங்கள் தமிழிலும், சிங்களத்திலும் இவர் உரையாற்றினார். மக்கள் பிரச்சினை சம்மந்தமாகவோ அரசியல் தொடர்பாகவோ எதுவும் பேசாத மகிந்த பொதுவாக உரையாற்றினார்.
குறிப்பாக யுத்தத்தினால் குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்களையும், யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களையும் சமூகமயமாக்கும் பொருட்டு விசேட வேலைத் திட்டமொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே அவர் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை என்று தனது உரையில் குறிப்பிட்ட மகிந்த நாட்டில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஒட்டுக்குழுக்களின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
கிழக்கு மாகாண சபை செயல்படுவதில் தற்போது நிர்வாக ரீதியான பிரச்சினைகள் எதிர்நோக்குவதால் எதிர்வரும் பதவிக் காலத்தில் அப்படியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறிலங்காவின் அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளீதரன், ஏ.எல். அதாவுல்லா, எஸ்.எச்.அமீர் அலி உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன் பின் காத்தான்குடிக்கு விஜயம் செய்த மகிந்த அங்கு பள்ளிவாசல் ஒன்றுக்கான வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார். தமிழினத்துக்கு துரோகம் செய்த ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள் மகிந்தவிற்கு அருகில் இருந்து எம்மை அழித்தது மட்டுமல்லாது அதை கைதட்டி சிரித்து மகிழ்வதாகவும் இந்நிகழ்ச்சியின் மூலம் தென்படுகிறது.
மேலதிக செய்திகள்
- தேசியத் தலைவரின் தாயார் ஊறணி மருத்துமனையில் அனுமதி
- தேசிய தலைவரின் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த சிறிலங்கா இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் கைது
- தேசிய தலைவரின் தாயாரை இந்தியா அனுப்ப சிறிலங்கா அரசு அனுமதிக்கவேண்டும் – வைகோ
- போலி நாணயத்தாள்களின் பாவனை சிறிலங்காவில் அதிகரிப்
- உண்ணாநிலைப்போராட்டமிருந்த கைதிகளில் 19பேர் வைத்தியசாலையில்
- யாழ்.நல்லூரில் மகேஸ்வரன் நினைவு மண்டபம் திறப்பு
- மகிந்தவின் வாக்குறுதியை நிராகரித்த தேசிய தலைவரின் உறவுகள்
- மெல்ல இறுகி வரும் மேற்குலகின் அழுத்தம் வேல்ஸிலிருந்து அருஷ்
- சிறிலங்காவில் சிறுபான்மை இனமென்று ஒன்றில்லையாம் – சொல்கிறார் மகிந்த
- தமிழ் தேசியத்தலைவருடன் பா.நடேசன், பழ.நெடுமாறன்
- மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோத குடியேற்றங்கள் – அரியநேத்திரன் தகவல்
- கோத்தபயாவின் மனைவி பணத்துடன் நாட்டைவிட்டு ஓட்டம்

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக