ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து மூன்று உயிர்கள் பலிகொள்ளப்பட்டமை ஜனநாயகத்திற்கு தடையாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைத்தாலும் இலங்கையுடன் உறுதியாக தொடர்புகளை வைத்திருக்க எண்ணுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கை யின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
நடைபெறவுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரு பிரதம வேட்பாளர்களின் பிரச்சார உத்திகளை நோக்கும் போது மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது, மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழமுரசிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள்.
மேலதிக செய்திகள்
- இயல்பு வாழ்வினை மீட்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் இராஜதந்திரம் – இதயச்சந்திரன்
- அயர்லாந்து நிரந்தர மக்கள் நீதிமன்றம் சிறிலங்கா அரசு போர்குற்றம் செய்துள்ளது என தீர்ப்பு
- இன்று தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள்
- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கவில்லை – அமெரிக்கா
- கூட்டமைப்பு சரத் ஒப்பந்தத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம் – மகிந்த
- பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் தொல்.திருமாவளவன்
- ஆனையிறவில் காங்கிரஸ் கைகள்! திருமாவளவனின் பேட்டி தொடர்கிறது.
- புத்தளத்தில் இரு பிரதான வேட்பாளர்களின் ஆதரவாளிடையே மோதல்! ஒருவர் பலி! மேலும் 15 பேர் காயம்!
- முள்ளை முள்ளால் எடுத்தல்
- தமிழீழ அரசியலும், நாடு கடந்த அரசாங்கமும் (TGTE)
- தேர்தல் ஆணையரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவும் – உச்ச நீதிமன்றம்
- அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் 65 சதவீதம் பூர்த்தி
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக