சனி, 23 ஜனவரி, 2010

போராளிகள் பயன்படுத்தும் படகு தமிழக கடற்கரையில்

தமிழக தனுஸ்கோடி கடலில் இன்று கைவிடப்பட்ட நிலையிலான பைபர் கிளாஸ் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 January 2010
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இறக்கக்கண்டியில் புதிய சிங்களப் பாடசாலை ஒன்று அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.
23 January 2010
எமது அன்புள்ள உறவுகளே! தங்களுக்குள்ள வாக்குரிமை சரத் பொன்சேகாவுக்கு வழங்கி எமது இனம் விழுவதையாவது தடுப்பதற்கு கைகோர்க்க உதவி புரியுமாறு வேண்டி நிற்கின்றோம். இவ்வாறு குறிப்பிட்டு, அரச அதிபர் தேர்தல் சம்பந்தமான அறிக்கை ஒன்றை இன்று தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ளது.
23 January 2010
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக இவ்வாண்டும் மாநில அரசாங்கம் மேலும் 40 இலட்சம் வெள்ளியை உதவி நிதியாக வழங்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வைத்தியர் சேவியர் ஜெயக்குமார் அறிவித்தார்.
23 January 2010
தமிழினம் காக்க தம் இன்னுயிரை ஈந்த அப்துல் ரவுப் தொடங்கி முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர் நினைவு நாள் வரும் வெள்ளிக்கிழமை நினைவு கொள்ளப்படவுள்ளது.
23 January 2010
காவற்துறை காவலில் துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்த 23 வயது குகனின் ஒராண்டு நினைவஞ்சலி பிரார்த்தனை இங்கு பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்டது.
23 January 2010
இரு பிரதான அரச அதிபர் வேட்பாளர்களான மகிந்த, சரத் பொன்சேகா ஆகியோரின் இறுதி பிரச்சார கூட்டம் கொழும்பில் இன்று மாலை நடைபெறவுள்ளது. மகிந்த ராசபக்‌ச அவர்களின் கூட்டம் பிலியந்தலவில் உள்ள சோமசிறி கமகே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
23 January 2010
அதிபர் தேர்தலின் போது யாராவது குழப்பத்தினை ஏற்படுத்தினால் தேர்தல் முடிவு ஒரு வாரத்தின் பின்னரே அறிவிக்கப்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
23 January 2010
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் ஒன்று திரண்டுள்ளதாக எதிரணிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
23 January 2010
எதிர்க்கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நாட்டை பிளவுபடுத்தவே பயன்படுவதாக அதிபர் மகிந்த ராசபக்ச தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்தும்
23 January 2010
சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைள் யாவும் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளன. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவுடன்
23 January 2010
ஆட்சியினை மாற்றுவதற்கு ஆணை கிடைக்குமானால் எமது சிறுபான்மை மக்களுக்கு ஒரு விமோசனம் ஏற்படும் எனவும் மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காகவே
23 January 2010
சனாதிபதித் தேர்தல் களத்தில் 21 பேர் போட்டியிடுகின்ற போதிலும் அரச தொலைக்காட்சிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
22 January 2010
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் மறுப்பதையே சிறந்த கொள்கையாக சிறீலங்கா அரசு கொண்டுள்ளது. ஆனால் அரசு அதன் நம்பகத்தன்மையை இழந்து வருவது மிக அதிகமாகி வருவதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
22 January 2010
தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 அரச அதிபர் வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
22 January 2010
எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தல் இறுதி முடிவுகளை 27 ஆம் திகதி காலை அறிவிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
22 January 2010
களனி புளுகக சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சிவாலயத்தில் தேர்தல் தினத்தன்று அதிகாலை விசேட பூசையொன்றை நடத்த மகிந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக களினி பிரதேச சபைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 January 2010
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது அதனை நேரில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் உள்ளார் என்றும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
22 January 2010
சிறிலங்காவில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக ஆசியாவின் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
22 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக