வியாழன், 31 டிசம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

இந்தோனேஷியாவின் மெராக் துறை முகத்தில் இருநூற்றியைம்பதுக்கும் மேற் பட்ட ஈழத் தமிழர்களுடன் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் இருப்பவர் களுக்குத் தொற்றுநோய் பரவத் தொடங்கி யுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
31 December 2009
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
31 December 2009
எம் உயிரிலும் மேலான தமிழீழ மக்களே! பிறக்கப்போகும் புதிய ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் வாழ்வில் புதிய எழுச்சியையும், புதிய உத்வேகத்தையும், திடசங்கற்பம் பூணும் ஆண்டுகளாகவும் அமையப்போகின்றது.
31 December 2009
தாய்லாந்தின் முன்னாள் பிரதம மந்திரி தக்சின் சின்வாத்ராவை, சிறிலங்காவின் பொருளாதார ஆலோசகராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக பாங்கொக் போஸ்ட் தெரிவித்துள்ளது.
31 December 2009
தென்னாசிய நாடுகளில் சிறிலங்காப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது.
31 December 2009
கிழக்கு மாகாண கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா அரசால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 December 2009
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தமை போன்று ஊர்காவல் படை வீரர்கள் நிதியத்திலிருந்து அதிபர் தேர்தலுக்காக எவ்வித நிதியும் செலவு செய்யப்படவில்லையென ஊர்காவல் படை பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
31 December 2009
கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.
30 December 2009
கொழும்பின் புறநகர் சிலாபத்தின் சுதுவெல தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ச இன்று கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 December 2009
தமிழீழ விடுதலைப்புலிகளின் 600 வங்கிக் கணக்குகளைப் பெற வேண்டுமானால், ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்கின்ற பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என சிங்கப்பூரைத் தளமாக கொண்டியங்கும் பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
30 December 2009
இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத்
தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவிய
மனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்
உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?
30 December 2009
உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
30 December 2009
அரச அதிபர் தேர்தலின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
30 December 2009
சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்திற்கும் சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸ்சேர சமரசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
30 December 2009
வன்னியில் இருந்து சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை மீளக் குடியமர்த்த எது வித காலக்குகெடுக்களும் இல்லை என சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளதாக சிறீலங்காவின் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
30 December 2009
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான றோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்து இட்டிருக்கவில்லை. ஆனாலும், போர்க் குற்றங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை நிறுத்தப்படக்கூடிய சாத்தியம் உள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
30 December 2009
கத்திஎடுத்ததும்
குண்டு பதித்ததும் வரலாறு;
குழந்தை கொன்றதும்
குடி அறுந்ததும் வரலாறு;
30 December 2009
மருதானை சுதுவெல்ல பகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கீத்சிறி ராஜபக்ஸவை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
30 December 2009
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
30 December 2009
"சபாஷ்! சரியான போட்டி" எனக் கூறுமளவுக்கு வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஆனாலும், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் இந்தியாவின் தலையீடுதான் இத்தேர்தல் பெறுபேறு என்ற தலைவிதியைத் தீர்மானிக்குமோ என்ற சாரப்பட அமைகிறது இந்த அரசியல் கண்ணோட்டம்.
30 December 2009


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக