கொழும்பின் புறநகர் சிலாபத்தின் சுதுவெல தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ச இன்று கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் 600 வங்கிக் கணக்குகளைப் பெற வேண்டுமானால், ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழ்கின்ற பொன்னையா ஆனந்தராஜா என்பரை கைது செய்ய வேண்டும் என சிங்கப்பூரைத் தளமாக கொண்டியங்கும் பயங்கரவாத நிபுணர்கள் குழுவின் தலைவர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத்
தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவிய
மனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்
உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?
உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரச அதிபர் தேர்தலின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறிலங்காவிற்கான இந்திய தூதுவர் அசோக் கே காந்திற்கும் சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸ்சேர சமரசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
வன்னியில் இருந்து சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகளை மீளக் குடியமர்த்த எது வித காலக்குகெடுக்களும் இல்லை என சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளதாக சிறீலங்காவின் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னி இறுதிப் போரின் பின்னர், நிவாரணக் கிராமம் என்று அழைக் கப்படும் வவுனியா வதை முகாம்களில் தங்கியிருந்த வேளை விசாரணைக்கெனப் படையினரால் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 738 பேர் இன்னும் சில நாள்களில் விடுவிக்கப்படுவர் என சட்டமா அதிபர் மொகான் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள அரச அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்க அரசாங்கமே வழிநடத்துவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
சுமார் 20 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச. டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பேருந்து சேவையை நடத்தி வருகின்றன.
மேலதிக செய்திகள்
- சிறிலங்காவில் பெற்றோலின் விலை குறைப்பு
- கோத்தபாய, சிறிலங்காவின் பாரிய வன்முறையாளர் என்கிறது "த கார்டியன்"
- பழ.நெடுமாறன் அவர்களின் தம்பி பழ.கோமதி நாயகம் காலமானார்
- ஒற்றையாட்சி நிலைப்பாட்டை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – இடதுசாரி முன்னணி
- நாட்டிற்கு சிறந்த தலைவர் மகிந்தவாம் – துரோகி கருணா புகழாரம்
- தஞ்சையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பேரமைப்பு மாநாடு
- கையூட்டு மற்றும் ஊழலை ஒழித்தால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கலாம் – சரத் பொன்சேகா
- நாட்டின் 75 சதவீதமான வளங்களை மகிந்த நிர்வாகம் செய்கிறார் – ஜே.வி.பி
- ஈழத் தமிழர்களை அவுஸ்ரேலியாவில் குடியேற்ற அவுஸ்ரேலிய எதிர் கட்சி ஆதரவு வழங்கவில்லை
- கொழும்பு விடுதியில் தங்கியிருந்த குடும்பத் தலைவர் புலனாய்வுத்துறையினரால் கைது
- ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதலில் 32 ஆயிரம் டொலர்கள் சேகரிப்பு
- வன்னி தொண்டர் ஆசிரியர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக