முகாம்களில் இருந்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், வாழ்வாதாரத்தையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொள்வதில் சிக்கலை சந்தித்து வருவதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலனை காரணம் காட்டி, தேர்தல்களுக்காக இலங்கை அரசாங்கம் பாரிய கடன்களை பெற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருவதாக கூறி தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளும் எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தெற்கு பகுதியிலுள்ள மாத்தறை மாவட்டத்தில் சர்வதேச விமானநிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கும் சீனா அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தால் தடுப்பு முகாம்களில் யுத்த கைதிகளாக சிறவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை இரகசியமாக படுகொலை செய்வதற்கு சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண் காணிப்பாளர்கள் எவரும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற் கொள்ள மாட்டார்கள் என மேற்படி ஒன்றி யத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பெர் னாட் செவாஜ் தெரிவித்துள்ளார்.
சனாதிபதி மகிந்த ராசபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த இரு வாரங்களில் வெளியாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்றுக்கூறினார்.
மோதல் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.
வவுனியா செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தில் டந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
சிறிலங்கா இராணுவத்தினர் மீதான முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்த யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கோரிக்கைக்கான பதில் தொடர்பில் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் உள் நாட்டு அரசியலில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாக இருக்குமே தவிர வேறு எந்த வகையிலும் முரணானதாக அமையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற போர்களின் போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் கடந்த பல வாரங்களாக நங்கூரமிட்டிருக்கும் கப்பலில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் தகுந்த சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயம் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக செய்திகள்
- ஆதரவாளர் கடத்தப்பட்டதாக ஜெனரல் பொன்சேகா முறைப்பாடு
- திசாநாயகத்திற்கு பிணை – அரசு தீர்மானம்
- கிழக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் ஆதரவில் முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் – புலனாய்வுத்துறை அறிக்கை
- ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் நிதி உதவியில் அரசியல் நடத்தும் ஈ.பி.டி.பியினர்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரிற்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவேண்டும்:அரியநேத்திரன்
- காணாமல் போனவர்களை விடுவிப்பதாக கூறி யாழ்ப்பாணத்தில் பணம் பறிப்பு
- தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது பற்றி தீர்மானம்
- அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைய முன்வந்தமை குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது – பாலித கோகன
- தமிழனே நீயும் பலமாகு….
- அவுஸ்திரேலியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதல்
- டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு
- ஐரோப்பிய ஒன்றியம் அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக