வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயம் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைதுசெய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
"நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆரம்பித்துள்ள புதிய அச்சுறுத்தலை நாம் நன்றாக அறிவோம். அந்த கட்டமைப்பை நாங்கள் நிச்சயம் உடைப்போம்" என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.
மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த கணவர் கந்தையா ரவிகரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டால்…..
இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின் போது சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிடம் விரிவான விளக்கத்தைக் கோரியுள்ள, அதே சமயம் இறுதி யுத்தத்தின்போது விடு தலைப் புலிகளின் தலைவர்கள் தாம் சரணடையப் போகின்றனர் என அறி வித்தும் அது பற்றிய எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த ஐக்கிய நாடு கள் சபையின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராமல் இருப் பது ஏன்?
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது வெள்ளைக்கொடிகளை ஏந்திவந்த புலித் தலைவர்களைச் சுட்டுக்கொல்லுமாறு பாது காப்புச் செயலாளர் படையினருக்கு உத்தரவிட்டார் என்று ஜென ரல் சரத் பொன்சேகா கூறியதன் விளைவாகப் படையினர் வெளி நாடுகளில் கடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் கடத்தப்பட்டமை மற்றும் அவர் கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிடம் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை முறையிட்டுள்ளார்
இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் தோன்றியுள்ள நெருக்கடிகளை தவிக்கும் நோக்கில் ஊடகவியலாளர் திசாநாயக்கத்திற்கு பிணை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சில முஸ்லீம் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புடன் முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மீளக் குடியேறும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் நிதி உதவியில் ஈ.பி.டி.பியினர் அரசியல் நடத்துவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் பணப்பறிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தி கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீண்டும் விடுவிப்பதாகக் கூறியே இந்தப் பணப்பறிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி கிராமசேவர்களிடம் காணமல் போனவர்களிடன் உறவினர்களின் விபரங்களையும், தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு பெறப்படும் தொலைபேசி இலங்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காணாமல் போனவரை விடுவிப்பதானால் குறிப்பிட்ட வங்கி இலக்கத்திற்கு சென்ற அவர்களால் தீர்மானிக்கப்படும் பணத்தினை வைப்பிலிடுமாறு கூறுகின்றனர்.
இவ்வாறு வங்கியில் பணத்தினை வைப்புச் செய்தும் பல இடங்களுக்கு உறவினர்கள் அலக்களிக்கப்பட்டும் காணாமல் போனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதனை அறிந்த உறவினர்கள் படை முகாங்களிலும் , காவல்நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இங்கு குறிப்பிட்டது போன்று, புலம் பெயர் நாட்டில் வதிக்கும் 55 அகவை மதிக்கத்தக்க ஒருவர் தனது மகனின் விடுதலைக்காக 20 இலட்சம் இலங்கை ரூபாக்களை வட்டிக்கு எடுத்து வழங்கிய போதும், அவரின் மகன் விடுதலை செய்யப்படவில்லை. குறித்த கும்பலால் தொடர்புக்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கமும் வேலைசெய்யவில்லை என ஏமாந்தவர் கவலை வெளியிட்டுள்ளார்.
வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்கள் சரணடைய முன்வந்தமை குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோகன தெரிவித்துள்ளார்.
நீரடி நீச்சல் எல்லாம் நாம் அறிவோம்
துயர் – நீந்திக்கரையேறும் வழியறிவோம்
யாரடிச்சாலும் திருப்பியடிப்போம்
தன்மான மீட்பிற்க்காய் உயிரை கொடுப்போம்..
சிறிலங்கா சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதனால் தொற்று நோய்களின் தாக்கமும் கூடவே அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சிறிலங்காவில் டெங்கு நோயின தாக்கம் காரணமாக 06 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 26பேர் வரையில் டெங்குநோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ் வலிகாமம் அளவெட்டிப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணால் போயிருந்த இவர், இன்று அளவெட்டி பினாக்கைப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தையிட்டி வள்ளுவர்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட சந்திரகாந்தன் சதீஸ் (17) என்ற இந்த இளைஞர், மல்லாகம் கோணப்பலம் ஏதிலிகள் குடியிருப்புத் தொகுதியில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த நிலையிலேயே கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு பயமுறுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- வடக்கின் வசந்தத்தில் திரைக்கூடங்களும், துடுப்பாட்ட மைதானங்களும் – பசில் ராசபக்ச
- சனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம் இன்றும் எடுக்கப்படவில்லை – தமிழ் கூட்டமைப்பு
- இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு
- கொழும்புக்கு செல்லும் தமிழர்கள் தங்களைப் காவல்துறையினரிடம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை: பசில் ராஜபக்ச
- பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நாவின் கடிதத்தை சிறிலங்கா அரசு ஆய்வு செய்கிறது
- மூன்று பிரிவுகளாகும் தமிழ் கூட்டமைப்பு
- கேணல் கிட்டு
- சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தல் விவகாரத்தில் தீர்க்கமாக ஆராய்ந்த பின்பே இறுதி முடிவு என்கிறார் பா. அரியநேத்திரன்
- இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 தமிழ் ஏதிலிகளில் 15 பேர் விடுதலை
- கோப்பன்ஹேகன் மாநாட்டில், முள்ளிவாய்க்காலில்,இராணுவத்தினால் ஏற்பட்ட மனித பேரழிவு கண்காட்சி
- அம்பலமாகும் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் – சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு
- வதை முகாம் பாலியல் கொடூரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் சிறிலங்கா மனித உரிமை அமைச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக