இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன்.
டென்மார்க் நாட்டில் வருகின்ற மார்கழி மாதம் 7-ம் திகதி முதல் 18-ம் திகதி வரை நடைபெறவிருக்கும் COP15 என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் ((UNFCCC) உலகம் முழவதிலும் 193 நாடுகளிலிருந்து தலைவர்களும், வெளியுறவு மந்திரிகளும், சுற்றுச்சூழல் அமைச்சர்களும் கலந்துக் கொள்வது மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் மற்றும் ஆயிரக்கணக்கான அரசு சார்பற்ற அமைப்புகளும் (NGO) 2012 ஆம் ஆண்டிற்கு பிறகான உலக தட்பவெப்ப நிலை ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக கலந்துக்கொள்ளவிருக்கின்றன.
இலங்கையில் சுற்றிச் சுழன்றடிக்கும் அரசியல் சூறாவளியில் எந்தெந்த பெருமரங்கள் அடியோடு பிடுங்கி எறியப்படப் போகின்றதோ? எந்தெந்தக் குப்பை கூளங்கள் எல்லாம் கோபுரத்தின் உச்சிக்குப் போய்ச் சேரப் போகின்றதோ, என்ற சரியான தீர்க்க தரிசன சிந்தனையற்ற இலங்கை அரசியல் வாதிகளும், சத்வதேச அறிவியல்-புலனாய்வுப் பிரிவுகளும் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தின் பின்னால் யாருக்கும் தெரியாமல் பழங்கதையொன்று பாரிய வடிவமெடுத்து அரங்கேறுவதற்கு அதிதீவிரமாக முடிவாகி வருகிறது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகளைப் பிரகடனப்படுத்தும் பிரேரணை 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அத்திகதியை ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 10 ஆம் திகதியை சர்வ தேச மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடும் தீர்மானம் இரண்டு ஆண்டுகள் கழித்து 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது.
மேலதிக செய்திகள்
- மகிந்த மடுக் கோயில் மற்றும் வவுனியாத் தடுப்பு முகாமிற்கும் சென்று திரும்பினார்
- அமெரிக்காவின் அந்தர் பல்டியும் கைவிடப்பட்ட ஈழத் தமிழர்களும்
- சிறீலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுவே மக்கள் விடுதலை இராணுவம் – மனோ கணேசன்
- மூன்று மாதகாலப்பகுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படும்: நீதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி
- உருத்திகுமாரனை கைது செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்க அரசாங்கத்திற்கு கிடையாது
- உரிமையா? சலுகையா? – ஹிண்ட்ராப் இரண்டாமாண்டு நிறைவு விழா
- அம்மா எதுவரைக்கும் காத்திருப்பாள் – தீபச்செல்வன்
- மக்கள் விடுதலைப்படையும், அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களும்! – அபிஷேகா
- வன்னியில் 'றோ' முகவர்களாக செயல்பட்ட இலங்கைத்தமிழர்கள் ஐம்பது பேர் இந்தியாவிடம் ஒப்படைப்பு
- மகிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குண்டுவைக்க கோத்தபாய திட்டம்….?
- வான்படைத்தள காவலரண் போராளிகள் இருவரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
- யாழ் பலாலியில் துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா படைக் காவலர் பலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக