தமிழர் தாயகத்தின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் ஏறக்குறைய இந்த உலகப் பந்தை கடந்து சென்றுள்ளன. ஆயினும் மாவீரர் நாள் என்ற வரலாற்று பதிவு உருவான நாள் முதல் எனது அன்பார்ந்த தமிழீழ மக்களே என ஒலிக்கும் அந்த மெல்லிய குரல் இம்முறை நேரடியாக ஒலிக்காமை என்னவென்று விபரிக்கமுடியாத ஒரு உணர்ச்சியையும் கிளப்பியதையும் மறுக்கமுடியாது.
ஏனைய செய்திகள்
இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன்.
டென்மார்க் நாட்டில் வருகின்ற மார்கழி மாதம் 7-ம் திகதி முதல் 18-ம் திகதி வரை நடைபெறவிருக்கும் COP15 என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் ((UNFCCC) உலகம் முழவதிலும் 193 நாடுகளிலிருந்து தலைவர்களும், வெளியுறவு மந்திரிகளும், சுற்றுச்சூழல் அமைச்சர்களும் கலந்துக் கொள்வது மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் மற்றும் ஆயிரக்கணக்கான அரசு சார்பற்ற அமைப்புகளும் (NGO) 2012 ஆம் ஆண்டிற்கு பிறகான உலக தட்பவெப்ப நிலை ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக கலந்துக்கொள்ளவிருக்கின்றன.
இலங்கையில் சுற்றிச் சுழன்றடிக்கும் அரசியல் சூறாவளியில் எந்தெந்த பெருமரங்கள் அடியோடு பிடுங்கி எறியப்படப் போகின்றதோ? எந்தெந்தக் குப்பை கூளங்கள் எல்லாம் கோபுரத்தின் உச்சிக்குப் போய்ச் சேரப் போகின்றதோ, என்ற சரியான தீர்க்க தரிசன சிந்தனையற்ற இலங்கை அரசியல் வாதிகளும், சத்வதேச அறிவியல்-புலனாய்வுப் பிரிவுகளும் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தின் பின்னால் யாருக்கும் தெரியாமல் பழங்கதையொன்று பாரிய வடிவமெடுத்து அரங்கேறுவதற்கு அதிதீவிரமாக முடிவாகி வருகிறது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகளைப் பிரகடனப்படுத்தும் பிரேரணை 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அத்திகதியை ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 10 ஆம் திகதியை சர்வ தேச மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடும் தீர்மானம் இரண்டு ஆண்டுகள் கழித்து 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது.
தனது அதிகாரத்தை ஏற்காமல், விடுதலைக்காகப் போராடிய தனது நாட்டு மக்களையே துரத்தியடித்து அழித்து, அதனையே ஒரு மாபெரும் வெற்றியாக கொண்டாடிய வேதாளம், இலங்கை ஆரண்யத்தில் தனது காட்டாட்சியை நீட்டித்துக் கொள்ள தேர்தலை எதிர்நோக்கியிருந்த நிலையில், தனக்கு கீழிருந்த பிசாசே தன்னை எதிர்த்து நிற்க முடிவெடுத்ததால் ஆடிப்போயுள்ள வேளையில், அதற்கு ஆதரவாக விக்கிரமாதித்தன் களமிறங்கியுள்ளது கொழும்புக் கதையில் ஒரு சுவராஸ்யமான திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! இலங்கை அரசின் உறவை நாம் இழக்க விரும்பவில்லை! இலங்கை அரசு ஒரு இறைமையுள்ளது! தற்போது அமெரிக்க அரசியல் வாதிகளின் வாயில் இருந்து வரும் சொற்கள் இதுவாகும். எங்கிருந்து வந்தது இந்தத் திடீர் மாற்றம் என அனைத்துத் தமிழர்களும் வியந்து நிற்கின்றனர். நாங்கள் மாறியிருந்தால் தானே, அப்பவும் எப்போதும் நாம் ஒரே மாதிரித் தானே இருந்தோம் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது அமெரிக்கா.
மேலதிக செய்திகள்
- மகிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குண்டுவைக்க கோத்தபாய திட்டம்….?
- வான்படைத்தள காவலரண் போராளிகள் இருவரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
- யாழ் பலாலியில் துப்பாக்கிச் சூட்டில் சிறீலங்கா படைக் காவலர் பலி
- புதுமாத்தளன் பகுதிக்கு மகிந்த இன்று பயணம் செய்துள்ளார்
- தேர்தலுக்கு முன் ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர் பாதுகாப்பு வேண்டும்: எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு
- கட்சி சொத்தை தனி்ப்பட்ட சொத்தாக ரணில் மாற்றியுள்ளார்: ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ
- உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை வேண்டும்: மனோ கணேசன்
- மருமகனின் நிறுவனம் மூலம் பொன்சேகா ஆயுதகொள்வனவு
- அகாசி் சிறீலங்காவுக்கு 19 தடவைகள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் சபையில் சர்ச்சை
- தேசத்தின் குரலே! – ரத்தினா
- சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலும் – தமி்ழ்த்தேசிய கூட்டமைப்பும்.
- அசோகராக மாற விரும்பும் மஹிந்தர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக