சனி, 12 டிசம்பர், 2009

லண்டனில் நடந்த கூட்டம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் அறிக்கை

ru-eelamநாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான உருவாக்கக்குழுவுக்கான மதியுரைக்குழு டிசம்பர் 3-6 வரையிலான திகதிகளில் தனது சந்திப்பினை லண்டன் மாநகரில் மேற்கொண்டது. நாடு கடந்த தமிழீழஅரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறுவிடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைபை இச் சந்திப்பில் மதியுரைக்குழுநிறைவு செய்தது.
12 December 2009
usa flagசிறீலங்காவில் விடுதலைப்புலிகளுடன் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
12 December 2009
sarath_mahindaமீண்டும், மீண்டும் அதே கதை. சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்…….!
இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான இலங்கை  இந்திய தொடர்பாடல்களின் போது கட்டவிழும் அதே நாடகம்  பம்மாத்து   இப்போதும்……….!
எத்தனை காலத்துக்குத்தான் ஏமாற்றுவர் இப்படி………?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்………!
12 December 2009
mano mpகாணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படும்வரை நாட்டில் நல்லிணக்கம் என்பது ஏற்படமாட்டாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன் தெரிவித்தார்.
12 December 2009
ellawala-me1இலங்கையின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று செயற்படவும் தயார் என கூறியிருக்கும் எதிர்க்கட்சியினரின் கூற்றானது பிரபாகரனின் தனிநாட்டு கோரிக்கைக்கு துணை போவதாகவே அமைந்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.
12 December 2009
sarathகொழும்பு புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ இல்லத்தை இராணுவக் பொலிஸார் இன்று மாலை சுற்றி வளைத்துள்ளனர்.
11 December 2009
UNOசிறீலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிளை அவர்களின் குழும்பங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என ஐநாவின் சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்தை கவனிக்கும் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி ஜெனரல் பேட்ரிக் கொமேர் கூறியுள்ளார்.
11 December 2009
sanath-jaya-suriyaஇலங்கை கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
11 December 2009
எட்டப்பர்நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
11 December 2009
Vaddukkoaddai_fr1வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்சில் 12,13 நாட்களில் தமிழீழ தாகத்தை உலகிற்கு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி எடுத்துரைக்கும் நாள் அதற்கான எமது உறுதிப்பாட்டை நடைபெறும் வாக்களிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து உலகிற்கு நிரூபிக்கும் நாள்.
11 December 2009
Australias-prime-minister-001இலங்கையில் யுத்தம் இடம்பெற்று நிறைவடைந்த காலப்பகுதியிலேயே அதிக அளவான மக்கள் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக வர முற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
11 December 2009
robert_blakeஅச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமையையிட்டு, தாம் வருத்தமடைவதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கான உதவு இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் பிளேக் இதனை தெரிவித்துள்ளார்.
11 December 2009
amparai rainingஅம்பாறையில் பெய்து வரும் அடை மழை காரணமாக 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பொத்துவில் முதல் கல்முனைவரையான கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
11 December 2009
srilankan_army_kills_tamil01சிறீலங்காவின் போர்க்குற்ற குற்றச் சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் என்ன செய்கிறது என, அதன் உத்தியோகபூர்வ வெளிவாரி ஊடகமான இன்னர் சிட்டி பிரஸ் நேற்று கேள்வி எழுப்பியது.
11 December 2009
mannarமன்னார் கடலோர பகுதியில் எரிபொருள் அகழ்வுபணிகளை இந்திய கம்பனியான கெயர்ன் இந்தியா ஆரம்பித்துள்ளது.
11 December 2009
vavuniya_idp_camp_001கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் வலிகாமம் வடக்குப் பகுதிகளில் இருந்து சிறீலங்கா படைகளால் வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக மாறத்தொடங்கியுள்ளன.
11 December 2009
இலங்கை வரைபடம்"இந்து சமுத்திரத்தின் முத்து" என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவு இரத்தக் குழம்பில் முழ்கியிருப்பதற்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, அறிய வேண்டியது அவசியம். தெற்கு, தென் கிழக்காசியாவில் மிகவும் பலம் பொருந்திய இடதுசாரி அரசியல் தோன்றி உருப்பெற்ற நாடு இலங்கைத் தீவாகும். ஆனால் அங்கே அந்த இடதுசாரி இயக்கங்கள் முற்றிலும் படு தோல்வி அடைந்துள்ளன. இனப்பிரச்சினையைப் கையாள்வதில் அவர்கள் கைக் கொண்ட நிலைபாடுகள் வரலாற்று வளர்ச்சிக்கு எதிர்க்கணியமாய் அமைந்து விட்டன. இத்தகைய நிலை எவ்வாறு ஏற்பட்டது என் பதை இங்கு நாம் ஆராய வேண்டியது அவசியமாகும்.
11 December 2009
arrestயாழ் வலிகாமம் ஏழாலைப் பகுதியில் சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் இளம் குடும்பத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 December 2009
vikramapahuநாட்டில் தற்போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது? எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது எதுவும் எமக்குத் தெரியாது. நாட்டை சிறைக்கூடமாக்கிவிட்டு ஒரு தேர்தல் அவசியம் தானா?என இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பினார்.
11 December 2009
sri_election_2010ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் சுதந்திர கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைகளை ஒத்த அரசியல் படுகொலைகள் இம்முறையும் இடம்பெறும் என்று அரசாங்க தரப்பு எச்சரித்துள்ளது.
11 December 2009


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக