புதன், 11 நவம்பர், 2009

யுத்தம் முடிவடைந்த பின்னரும் மக்கள் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்: வாசிங்டன் டைம்ஸ்

sonia_rajapakseதமிழ் மக்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் இந்தியா நேரடியாக தொடர்பு பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. விரிவு… »

பிரதான செய்திகள்

maoistஇந்திய அரசை மட்டுமல்ல; உலகையே தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். மேற்குவங்க மாநிலம் லால்கர் பகுதியில் வெடித்துக் கிளம்பிய மாவோயிஸ்டுகள், இப்போது ஜார்கண்ட், ஒரிஸா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளிலும் பழங்குடி மக்களுக்காக ஆயுதங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடி மக்கள் மீதான மேற்குவங்க மாநில அரசின் வன்முறைகளை `ஆபரேஷன் கிரீன் ஹண்ட்' (Operation Green Hunt) என்று ஆவணப் படமாக்கும் முயற்சியில் மேற்குவங்க எல்லைப் பகுதியில் கேமராவோடு திரிந்து கொண்டிருக்கிறார், இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான கோபால் மேனன்.

11 November 2009

jv_logoஎத்தனையோ உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்… இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!

11 November 2009

Jaffna_Armyசிங்கள ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 13 ஆண்டுகள் கடந்து விட்டதன் பின்னரும் கூட யாழ் குடாநாட்டு மக்களுக்கு அது திறந்தவெளிச் சிறையாகவே உள்ளது என தென்பகுதி ஊடகவியலாளர்கள் கூறியுள்ளார்கள்.

11 November 2009

kpகேபி சித்திரவதைக்குள்ளாக்கப்படவில்லை எனவும் அவர் பனாகொட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்ததை லங்கா கார்டியன் மறுத்திருக்கிறது. தமது செய்தி துல்லியமானது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

10 November 2009

ஏனைய செய்திகள்

washingtontimes-logo1யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் பூர்த்தியான பின்னரும் இன்னும் 200,000 மக்கள் இடநெருக்கடியான முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக த வாசிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

11 November 2009

indo_shipஇந்தோனேசியாவில் தரித்துள்ள இலங்கை படகில் உள்ள 10 பெண்கள் மேற்கொண்டிருந்த உண்ணாநிலைப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 November 2009

sarath_fonsekaகூட்டுப்படை தலைமையதிகாரி  சரத் பொன்சேகாவின் வீதியோர கட்அவுட்டுகள் மற்றும் பதாகைகள் என்பவற்றை அகற்றுமாறு சிறீலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

11 November 2009

kokkulaayசிங்கள அரசாங்கங்களினால் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்புக்களை துண்டாடும் நோக்குடன் குடியேற்றப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைப்போர் பலம் பெற்று நடந்து கொண்டிருக்கையில் அச்சம் காரணமாக வெளியேறிய சிங்கள குடியேற்றவாசிகள் தம்மை மீண்டும் அதே பகுதிகளில் குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

11 November 2009

sri lanka armyசிறீலங்கா படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை தொடரும் என சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் தமிழி்ன மக்களின் உரிமைக்கான போர் பன்னாட்டு படைகளின் உதவியுடன் நசுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சிறீலங்கா அரசு தொடந்தும் படைகளுக்கு ஆட் சேர்ப்பதி்ல் ஆர்வங்காட்டி வருகின்றது.

11 November 2009

leaderஎன்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான் என்று தமது அண்மைய ஆய்வு ஒன்றில் வலியுறுத்தியிருக்கும் இவர்கள், அக்கருதுகோள் குறித்து இந் நேர்காணலில் மீண்டும் வலியுறுத்திப் பேசுவதுடன் அதை ஒரு இயக்கமாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்கள்.

11 November 2009

srikanthan mpஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதே தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடு என  நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

11 November 2009

mahinda_manmohanதமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்ளவதற்கு பல்வேறு உலக நாடுகள் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சிறீலங்கா ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார்.

11 November 2009

[இரண்டாம் இணைப்பு] திருச்சி வந்த ராஜபக்சேவின் தங்கை நிருபமா நடராசனுக்கு கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய 36 பேர் கைது.

11 November 2009

mulli_doctorsவன்னியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் தங்கமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ் அவர்களின் பிணையானது சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

11 November 2009

sivathamby_01ஈழத் தமிழர்கள் மத்தியில் இயல்பாக உருவாகியிருந்த 'பேராசிரியர் சிவத்தம்பி' என்ற பெரு விம்பம் அவராலேயே சுக்கு நூறாக உடைக்கப்பட்டு விட்டது. "ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை" என்பது அறிஞர் பெருமைக்கு அழகல்ல.

11 November 2009

dolphin_vanகடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் கொலை, கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சுமார் 15000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசேட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

11 November 2009

Jayalath-Weerakkodyசிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாளர் விமானப்படை தளபதி ஜயலத் வீரக் கொடி என்பரை நியமிப்பதற்கு சிறீலங்கா ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ச கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

11 November 2009

south_african_flagதென்னாப்பிரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைச்சர் நக்கோன மஸ்பானே நாளை சிறீலங்காவிற்கு பயணம் செய்யவுள்ளார்.

11 November 2009

vasudevaசிறீலங்காவில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் முகிழ்விடும் நிலைமை உருவாகி வருவதாகவும் அந்நிலை தென்னிலங்கை இனவாதிகளினாலேயே ஏற்படும் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

11 November 2009

RAW_indiaஇந்திய புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரி ஒருவர் சிறீலங்காவின் பாதுகாப்பு படைப்பிரிவுகளின் பிரதான சரத் பொன்சேகாவின் பிரதிநிதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 November 2009

sarath_mahindaசிறீலங்காவின் முன்னாளர் இராணுவத் தளபதியும் தற்போதைய பாதுகாப்பு படைப்பிரிவுகளின் பிரதானியுமான சரத் பொன்சேகா தனது பதவியியை இராஜினாமாச் செய்தால் அதனை தான் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

11 November 2009

sl_Nandanaசிறீலங்காவில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக எச்சரித்துள்ளார்.

11 November 2009

divainaயுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுக்க சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

11 November 2009

child_budhdhistசிறீலங்காவின் குருனாகல் மாவட்டத்தில் குளியாம்பிட்டிய பிரதேசத்தில் மூன்று சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

10 November 2009

--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக