விடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது. அவரை எந்தவொரு சக்தியாலும் இலகுவில் அழித்துவிட முடியாது. என தேசியத் தலைவரின் மாவீரர் உரைகள் அடங்கிய நூல் வெறியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.
நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா..?
அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல் நேற்று பிற்பகல் 27.11.2009, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூறும் தேசிய நினைவெழுச்சி நாள் இடம்பெற்றது.
இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை, பொதுநலவாய நாடுகளின் தலைவர்களிடம் கோரியுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் என்ட் டபேக்கோவில் கூடியுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவரான ராம் அவர்கள் இன்று மாவீரர் தின உரை ஒன்றை ஒலிவடிவில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் சிறீலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து செயல்படுவதாக பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என நாம் பொறுமை காத்தோம். இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் சிறீலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.
மேலதிக செய்திகள்
- இன்று தேசம் காத்த தெய்வங்களுக்கு சுடரேற்றும் நாள் நவம்பர் 27
- மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன்
- பொதுநலவாய மாநாட்டில் சிறீலங்காவுக்கும் பிரிட்டனுக்குமிடையில் முறுகல்
- கார்த்திகை தீபங்களே!
- கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை விடுவிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: விமல் வீரவன்ச
- ஜனாதிபதி மகிந்த டிச. 8 ல் யாழ். செல்கிறார்
- தேசிய மாவீரர் நாள்
- மொனராகலை, அம்பாந்தோட்டையில் நேற்றுக்காலை நிலநடுக்கம்
- மாவீரர் தினத்தில் தனி ஈழம் அமைவதற்கு சூளுரை: டாக்டர் கிருஷ்ணசாமி
- யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவு எட்டப்படவில்லை – சுரேஸ் பிறேமசந்திரன்
- தமிழீழம் அடுத்த வல்லரசாக உருவாகும் என்ற அச்சத்தில் உலகமே ஒன்றுசேர்ந்து அதனை அழித்தது: கனடாவில் சீமான்
- புத்தளத்தில் 11 வயது சிறுமி மூன்று பேரால் பாலியல் பலாத்காரம்
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக