வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தென்மராட்சி மிருசுவில், கொடிகாமம் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களை ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமான மணல்காடு பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியுள்ளார்.
இன கலாச்சார அழிப்பிற்கு நோர்வே ஆற்றும் பங்கு அண்மையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கலை நிகழ்ச்சிகள் ஊடான நோர்வேயின் கலாச்சாரக் கூட்டுத்தாபனம் (RIKSKO SERTRNE) பௌத்த அமைப்பான சேவாலங்காவுடன் இணைந்து காலியில் எதிர்வரும் 27ம் திகதி அன்று ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது என நேற்று வெளியாகியுள்ள ஈழமுரசு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கையில் இராணுவத்தால் நடத்தப்படும் முட்கம்பி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலிகளின் விடுதலைக்கு உடன் வழி செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டாயம் வலியுறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதோடு அவற்றின் உற்பத்திகள் யாவும் சிறீலங்கா அரசாங்க மருத்துவமனைகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- சிறீலங்காவுக்கு ஜி எஸ் பி பிளஸ் 2010 நடுப்பகுதி வரையில் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்
- சிறீங்லங்கா சிறையில் உள்ள இந்திய கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- ஓசியானிக் வைக்கிங் பெண்கள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்
- இராணுவம் வழிகாட்டும் பயணம் என்பதால் முகாம்களுக்கு செல்லும் அழைப்பை நிராகரித்தேன்: சிவசக்தி ஆனந்தன்
- போரில் சிக்கி உயிரிழந்த மக்களின் மரணச் சான்றிதழைப் பெறுவதில் உறவினர்கள் சிரமம்
- வாடகைக்கு வீடு தேடுகிறார் சரத் பொன்சேகா: உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால் பெறுவதில் சிரமம்
- அனோமா பொன்சேகாவும் இராணுவத்தின் ரணவிரு சேவா அதிகார சபைப் பொறுப்பிலிருந்து பதவி விலகல்!
- தமிழர்கள் நாட்டில் எங்குமே சுதந்திரமாக நடமாடமுடியாத சூழ்நிலை இலங்கையில்!
- காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! – வைகோ கண்டனம்!
- தமிழர்களை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிக்கு நோர்வே நிதியுதவி
- கருணாநிதியின் அறிக்கையை கண்டித்து தமிழகத்தில் சுவர் ஓட்டிகள்
- தமிழனுக்கு அகதி என்று பேர்!
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக