ராம் என்பவர் பெயரால் உலகத் தமிழர்களை குழப்ப இந்திய – சிங்கள உளவுத் துறைகளின் முயற்சி பழ. நெடுமாறன்
விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது.
28 November 2009
[விரிவு]
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை 2009
விரிவு… »
[ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் ஊடாக தமிழர்களுக்கு அளித்த உரை.
[ஒலி] தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
[ஒலி]தமிழ் வெப்துனியா ஆசிரியரும் தமிழீழ ஆதரவாளருமான அய்யநாதன் அவர்கள் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் வழியாக தமிழின மக்களுக்கு அளித்த உரை.
[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று ஊடகங்கள் கூறிய பொழுது தமிழீழம் வந்து தலைவருடன் நிழற்படங்கள் எடுத்து தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று உலகத்துக்கு கூறியது போன்ற வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா…? என்று பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவரான ராம் அவர்கள் இன்று மாவீரர் தின உரை ஒன்றை ஒலிவடிவில் வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் சிறீலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து செயல்படுவதாக பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்தறிவதே மெய் என நாம் பொறுமை காத்தோம். இருப்பினும் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை மூலம் அவர் சிறீலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாடு வலுத்திருக்கிறது.
[படங்கள்] நண்பகல் 12:00 மணியளவில் மாவீரர்நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து தங்கள் தேசியப்புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலத்தினர்.
[படங்கள்] பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இன் நிகழ்வு, மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது, நாட்டிய நாடகங்கள், இசை மற்றும் அகவணக்கம் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து கட்டளை வழங்கிய சிறிலங்கா தேசிய பாதுகாப்பு சபை இன்று என்னை படுகொலை செய்வதற்கு திட்டம் வகுத்து அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
[ஒலி] புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக மாநிலத்தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் இன்று நடைபெற்ற
காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
[படங்கள்] மாவீரர் நாள் வெளியீடாக லண்டன் தமிழ் இளையோர் அமைப்பினரின் கல்லறை பூக்கள் இசைப்பேழை வெளீயீடு
[ஓலி]இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை
காங்கிரசை தமிழகமண்ணைவிட்டு ஒழிப்போம் என்று முழங்கியர் பெரியார். அவரின் வம்சவழியில் வந்ததாககூறி நான்கு இனிசியலோடு நடமாடும் இளங்கோவன் தமிழனின் (எருமைமாடு போன்ற)பொறுமைக்கு ஒரு சான்றாக இருக்கிறார்.
சிறீலங்கா வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று புத்தள துன்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதில் நால்வர் பலியாகியுள்ளனர்.
ஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் சிறீலங்கா படைகள் வெற்றி பெற்றனவா என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
பொறியியலாளராக வேண்டும் என்ற இலக்குடன் கல்வி பயின்றுவந்த நான் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைத்திருந்தேன்.
கொழும்பில் குண்டுகள் நிரப்பிய வாகனங்கள் மூலம் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சிறீலங்கா புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று மாவீரர் நாள்! தமிழ்த் தேசியத்தைப் பேணவும், தமிழர் தாயகத்தை பாதுகாக்கவும், தமிழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுக்கவும், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழத் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை பூசித்து வணங்கும் புனித நாள் இன்று.
2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை சிறீலங்காவில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது. பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலவச பாடநூல் வழங்கும் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் 8 ஆம் திகதி யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு பாடநூல் வழங்கலை ஆரம்பித்து வைப்பார்.
ஒவ்வொரு தீபம்
ஏற்றும் போதும் சொட்டும்
ஒவ்வொரு சொட்டுக்
கண்ணீரிலிருந்தும் -
முளைக்கட்டும் எம் ஈழ தேசம்!
தென்னிலங்கையின் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகற்பவியல் அகழ்வாராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக