வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மகபேறுக்கான போதிய சுகாதார வசதிகள் இன்மையால் கடந்த மாதத்திற்குள் 41 குழந்தைகள் இறந்துள்ளன. இதனை தவிர போதுமான மருத்துவ வசதிகள் இன்றி, தினமும் வயோதிபர்கள் பலர் உயிரிழந்து வருவதாக தெரியவந்துள்ளது. விரிவு… »
பிரதான செய்திகள்
கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.
ஏனைய செய்திகள்
'நாம்' மற்றும் 'போருக்கு எதிரான பத்திரிக்கையாளர்கள் அமைப்பு' என்ற பெயருடன் பல்வேறு பிரபலங்களின் கவிதை தொகுப்பினை ஈழம் மவுனத்தின் வலி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜாக்கிவாசுதேவ் என்னும் சாமியாரும், பாதிரியார் கஸ்பார் அவர்களும் முன்னின்று நடத்திய இந்த புத்தகவெளியீடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் நேற்றுமுன்தினம் ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அதனை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று முன்னிரவு வெளியான தகவல்கள் தெரிவித்தன.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக