ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜூலை, 2011

விக்ரமுக்கு ஓ.கே சொன்னார் விமலா ராமன்

தமிழில் சேரனுடன் நடித்த 'ராமன் தேடிய சீதை' படத்துக்கு பிறகு விமலா ராமன் தெலுங்கு, மலையாள படங்களில் பிரபலமானார்.

”மங்காத்தா” படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் ”பில்லா-2” படத்தில் நடிக்க விமலா ராமனிடம் கேட்டார்களாம்.

அதற்கு விமலா ராமன் உடனடியாக பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனார்.

லேட்டஸ்ட் ”பில்லா” படத்தில் அஜித்துடன் நடிக்கும் நாயகிகளில் ஒருவராக விமலா ராமனை நடிக்க வைக்கும் முடிவோடு அணுகினார்களாம்.

ஆனால் விமலா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான விக்ரமுடன் இணைந்து நடிக்க 'ஓ.கே' சொல்லிவிட்டு, அஜித்துடன் நடிக்க 'நோ' சொன்னாராம்.

இதனால் ”பில்லா” படக்குழு படத்துக்கு பொருத்தமான நாயகியை அலசி தேடிவருகிறதாம்.

வியாழன், 14 ஜூலை, 2011

அஜித்துடன் நடிக்க மறுத்த விமலா ராமன்

அஜீத் நடிப்பில் சக்ரி இயக்கும் படம் "பில்லா 2" ,விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதில் ஹீரோயினாக மாடல் ஹுமா குரேஷி நடிக்கிறார். இன்னொரு ஹீரோயின் வேடத்துக்கு விமலா ராமனிடம் பேசினர்.

ஆனால் "பில்லா 2" வில் நடிக்க விமலா ராமன் மறுத்துவிட்டார்.

முன்னணி இடத்துக்கு வர தெலுங்கில் கவர்ச்சியாக நடித்து வரும் விமலா, "பில்லா" வில் அஜீத்துக்கு ஜோடி என்பதால் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே கூறப்பட்டது.

அவர் மறுத்திருப்பது பட யூனிட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விமலா தரப்பில் கூறும்போது, தெலுங்கு படங்களில் விமலா பிசியாக உள்ளார்.

இந்தி படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்கவில்லை என்றனர்.

படத்தில் ஹுமா குரேஷிக்கே முக்கியத்துவம் என்பதால்தான் இதில் விமலா நடிக்கவில்லை என கூறப்படுகிறது